அல்கொய்தாவிற்கு ஆள் சேர்க்கும் லண்டன் மசூதி- மாறாமல் இருப்பதற்கு காரணமான ஹூக் கை ஹம்சா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன் : லண்டனின் ஃபின்ஸ்பரி பூங்கா மசூதி கடந்த சில ஆண்டுகளாகவே தீவிரவாத முகாமிற்கு ஆள் சேர்க்கும் மையமாக விளங்குவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.

கடந்த 2 மாதங்களாகவே தீவிரவாத தாக்குதலுக்கு அடிக்கடி ஆளாகும் நாடாக இருந்து வருகிறது பிரிட்டன். ஞாயிற்றுக் கிழைமை இரவு கூட லண்டனின் ஃபின்ஸ்பரி பார்க் மசூதியில் தொழுகையை முடித்து வந்தவர்கள் சிலர் மீது வேன் ஒன்று கடுமையாக மோதியது. இஸ்லாமிய தீவிரவாத அச்சுறுத்தலை வெளிக்காட்டும் வகையில் நடத்தப்பட்ட இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என்று விசாரணை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

 London's Finsbury park mosque turned as radical islam centre because of 'Hook handed' Hamsa

லண்டன் பிரிட்ஜ் மற்றும் மேன்செஸ்டரில் தாக்குதல் நடந்த அதே மாதத்தில் இந்தத் தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்கள்
அனைத்திற்கும் இஸ்லாமிய அமைப்புகளே பொறுப்பேற்றுள்ளன. இஸ்லாமை தீவிரவாதமாக பரப்பி வந்த மதகுரு அபு ஹம்சாவின் வழி வந்தவர்களே இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் என்று வெட்டவெளிச்சமாவதாக கருதப்படுகிறது.

பவுன்சர் டூ மதகுரு

அபு ஹம்சா அல்-மஸ்ரி 1979ம் ஆண்டு லண்டன் வந்தார். இவரின் தந்தை கப்பல்படை அதிகாரி. இவர் முதலில் பவுன்சராக பணியாற்றியுள்ளார், பின்னர் 1986ம் ஆண்டு பிரிட்டன் நாட்டின் குடியுரிமை கிடைத்தது. ஆஃப்கானிஸ்தானில் நடந்த போரில் ஹம்சாவிற்கு ஆர்வம் வந்துவிட, அதில் பங்கேற்றதில் கண்பார்வை மற்றும் கைகளை இழந்தார். இதனையடுத்து அவரது கைக்கு பதிலாக ஹூக் பொறுத்தப்பட்டது, இதனாலேயே ஹம்சா ஹூக் கைக்காரர் என்று அழைக்கப்பட்டார். 1997ம் ஆண்டு பிரிட்டன் திரும்பிய ஹம்சா மதபோதகாராக மாறினார். இதே ஆண்டு அவர் ஃபின்ஸ்பரி பார்க் மசூதியயின் இமாமாகவும் பொறுப்பேற்றுக்கொண்டார். தன்னை கடவுளின் தூதர் என்று அழைத்துக் கொண்ட ஹம்சா, பணம் சம்பாதிப்பதில் ஆர்வம் காட்டாமல் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்யும் இமாமாக செயல்பட்டு வந்தார்.

தீவிரவாதத்தை விதைத்த ஹம்சா

ஆங்கிலம் மற்றும் அரபு மொழியில் புலமை பெற்ற ஹம்சா, மசூதிக்கு வருவோரிடம் இரு மொழிகளில் மதத்தை போதிப்பதில் சிறந்து விளங்கினார். தொடக்க காலத்தில் அவர் நடுநிலையோடு செயல்பட்டாலும் காலப்போக்கில் அவரது பேச்சு இயற்கையாகவே தீவிரவாதத்தை தூண்டுவது போல அமைந்தது. அவரது அந்த ஆணித்தரமான தீவிரவாத கொள்கை பரப்பு செயலால் ஃபின்ஸ்பரி பார்க் மசூதி இஸ்லாம் தீவிரவாதத்தை வளர்க்கும் மையம் என்ற பார்வையை கொண்டு வந்தது.

விஷமி ஹம்சா

இஸ்லாமின் கொடூர பக்கங்களை கற்பிப்பதால் இந்த மசூதி பல ஆண்டுகளாகவே தீவிரவாத செயல்களுக்கான முக்கிய இடமாகமாறிவிட்டது. இஸ்லாமிய போதனைகளை கற்பிப்பதோடு மட்டுமல்லாமல் வெடிகுண்டு வீசுவது எப்படி, ஏகே 47ரக துப்பாக்கியை பிரயோகிப்பது உள்ளிட்டவற்றையும் மசூதிக்குள்ளேயே சொல்லித் தந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2002ம் ஆண்டு இவர் நிகழ்த்திய உரை ஒன்றில் " ஒசாமாவிற்கு நீண்ட ஆயுள் வேண்டும் என்று நான் கடவுளை வேண்டுகிறேன்" என்று பேசியிருந்தார். ஆஃப்கானிஸ்தானில் தாலிபனை இயங்க அனுமதிக்கும் அரசே பாராட்டிற்குரிய அரசு என்றும் அவர் கூறியிருந்தார்.

மசூதியில் தீவிரவாதம்

வடஅமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வருபவர்கள் இந்த மசூதியில் ஹம்சாவுடன் தங்கி பயிற்சி பெற்று பின்னர் ஆஃப்கானிஸ்தான் மற்றும் மத்தியகிழக்கு நாடுகளில் உள்ள தீவிரவாத முகாம்களுக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது. தீவிரவாத பயிற்சி பெற வருபவர்களை மூளைச் சலவை செய்யும் ஹம்சா வாழ்வை சுகமாக வாழும் இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துகளை பரப்பி வந்துள்ளார். கலிஃபாவை கொண்டு வருவது மட்டுமே இஸ்லாமியர்களுக்கான ஒரே தீர்வு என்றும் ஜிகாதிகளை வெளிக்கொண்டு வர தீவிர பயிற்சி தேவை என்றும் ஹம்சா கூறியுள்ளார்.

மாறாத மசூதி

2003ம் ஆண்டு பிரிட்டிஷ் போலீஸ் ஹம்சாவை விசாரணைக்கு அழைத்து சென்றதோடு, ஃபின்ஸ்பரி பார்க் மசூதியையும் மூடியது. 2006ம் ஆண்டு அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்ட ஹம்சா தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்தது உள்ளிட்ட காரணங்களுக்காக கடந்த 2015ம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார். இதனைத் தொடர்ந்து ஃபின்ஸ்பரி பார்க் மசூதி 2005ம் ஆண்டு திறக்கப்பட்டது, புதிய மதகுருக்கள் இந்த மசூதிக்கு அமைக்கப்பட்டனர். இதனையடுத்து இந்த மசூதி மீதான அவப்பெயரை மாற்றும் பணியில் மதகுருக்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மசூதியில் தீவிரவாத பயிற்சி அளிக்கப்படுகிறது என்பதை மாற்ற முடியவில்லை என்பதோடு அதற்கான சான்றாகவே கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் விளங்குகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Over a period time the Finsbury park Mosque turned into a recruitment centre for the al-Qaeda
Please Wait while comments are loading...