வெள்ளைக்காரன்லாம் ஆதி காலத்துல கருப்பசாமி தான் போலயே... 10,000 ஆண்டு எலும்புக்கூடு சொல்லும் உண்மை!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  10,000 ஆண்டு எலும்புக்கூடு சொல்லும் உண்மை!- வீடியோ

  லண்டன் : பிரிட்டிஷ் ஆதி குடிகளின் நிறம் கருப்பு என்றும் அவர்களின் கருவிழிகள் நீல நிறத்தில் இருந்ததாகவும் புதிய ஆய்வு ஒன்று சொல்கிறது. 10 ஆயிரம் ஆண்டு கலா பழமையான செட்டர் மனிதனின் எலும்புக்கூடை வைத்து செய்த டிஎன்ஏ பரிசோதனையில் இவை தெரியவந்துள்ளன.

  இங்கிலாந்தின் செட்டார் கிராமத்தில் உள்ள குகை ஒன்றில் இருந்து 1903ம் காலகட்டத்தில் வாழ்ந்த செட்டர் மனிதனின் எலும்புக்கூடு ஒன்று குகை ஒன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி லண்டன் பல்கலைக்கழக கல்லூரி ஆராய்ச்சியாளர்களும், நேச்சுரல் ஹிஸ்டரி மியூசியத்தை சேர்ந்தவர்கள் இந்த எலும்புக்கூட்டை ஆராய்ச்சிக்கு உட்படுத்தினர்.

  மண்டை ஓட்டில் இருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏவைக் கொண்டு செட்டர் மனிதனின் முகஅமைப்பை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இதன் முடிவுகள் பிப்ரவரி 7ம் தேதி அறிவிக்கப்பட்டன.

  ஆதி மனிதனின் நிறம் கருப்பு

  ஆதி மனிதனின் நிறம் கருப்பு

  செட்டர் மனிதனின் டிஎன்ஏ ஆய்வு முடிவில் பிரிட்டனின் ஆதி குடிகளின் நிறம் அடர் பிரவுன் நிறத்தில் இருந்ததாகவும், அவர்களின் கண் கருவிழி நீல நிறத்தில் இருந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போதைய பிரிட்டர் மக்களை விட ஆதிகால மனிதன் யர்ம் குறைவாக இருந்ததாகவும், இற்த மனிதன் 20 வயது உடையவராக இருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

  இப்போதைய நிறம் பொருந்தாது

  இப்போதைய நிறம் பொருந்தாது

  செட்டார் மனிதனின் நிறம் பற்றி கூறியுள்ள தொல்லியல் ஆராய்ச்சியாளர் டாம் பூத் "ஆதி மனிதனின் நிறம் கருப்பு என்பது நமக்கு ஆச்சரியமளிக்கலாம். ஆனால் நிற மாற்றம் என்பது சமீப காலத்தில் தான் நிகழ்ந்திருக்கிறது, ஆதி கால மனிதனுக்கு இது பொருந்தாது என்பதைத் தான் இந்த ஆய்வின் முடிவு உணர்த்துகிறது என்றார்.

  ஆச்சரியமளிக்கும் ஆய்வு முடிவு

  ஆச்சரியமளிக்கும் ஆய்வு முடிவு

  ஆப்ரிக்காவைச் சேர்ந்தவர்கள் தான் அடர் கருப்பு நிறத்தில் இருப்பார்கள் என்ற தோற்றம் பல ஆண்டுகளாக இருக்கிறது. இதனால் ஆப்ரிக்கர்களின் நிறம் கருப்பு என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் இந்த புதிய ஆய்வு முடிவு ஆச்சரியத்தை தருகிறது.

  பழங்கால பிரிட்டன் மக்கள்

  பழங்கால பிரிட்டன் மக்கள்

  வரலாற்று காலத்திற்கு முந்தைய பிரிட்டானியர்களின் மரபணுவை இதற்கு முன் இதுபோல ஆய்வு செய்ததில்லை. பனி யுகத்திற்கு பின், பிரிட்டனுக்கு குடிபெயர்ந்த மக்கள் குறித்து தெளிவான புரிதலை வழங்கும் வகையில் இந்த ஆய்வு அமைந்துள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  DNA tests of 10,000-year-old skeleton known as Cheddar Man shows that early Britons had fair complexions and blue eyes.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற