ஓடி வந்த பெண்.. தாவி வந்து உதட்டில் முத்தம் தந்த காட்டு ராஜா.. வீடியோ
சிங்கத்தை கட்டி பிடித்து பெண் ஒருவர் முத்தம் கொடுத்தார்.
பார்சிலோனா: மொழி, இனம், உருவம் தாண்டி எல்லையில்லாமல் இன்றுவரை நம்மை விழ வைத்து கொண்டிருப்பது பாசம்... இதில் விழுந்துவிட்டால் மனிதன் என்ன? மிருகம் என்ன?
ஸ்பெயின் நாட்டில் ஒரு பெண் சிங்கத்தை வளர்ந்து வந்திருக்கிறார். ஆனால் இப்படி வனவிலங்குகளை உரிய அனுமதியின்றி வீட்டில் வைத்து வளர்ப்பது சட்டப்படி குற்றம் என்பது உலகெங்கும் பொதுவான விதி.
இந்த பெண் வீட்டில் சிங்கம் வளர்ப்பது அந்நாட்டு அரசுக்கு தெரிந்துவிட்டது. அதனால் வீட்டுக்கு வந்து, அந்த சிங்கத்தையும் பிடித்து கொண்டு போய் மிருக காட்சி சாலை கூண்டில் அடைத்துவிட்டது அரசாங்கம். சிங்கத்தை பிரிந்து அந்த பெண்ணாலும் இருக்க முடியவில்லை.. பெண்ணை பிரிந்து சிங்கத்தாலும் இருக்க முடியவில்லை.

துள்ளி ஓடுகிறது
இப்படியே ஏழு வருஷங்கள் போய்விட்டது. பிறகு ஒருநாள் அந்த பெண், தான் வளர்த்த சிங்கத்தை பார்க்க அனுமதி பெற்று அந்த மிருக காட்சி சாலைக்கு வருகிறார். சிங்கமோ கூண்டில் உள்ளது. அந்த பெண் உள்ளே நுழையும்போதே ஹலோ என்றுகூப்பிட தொடங்குகிறார். அந்த ஒத்தை வார்த்தையை கேட்டதும், சிங்கம் இங்குமங்கும் துள்ளி ஓடுகிறது.

உதட்டில் முத்தம்
"கேஷ்ஹயாங்ஷ்ருக்நியோஓஷ்" என்று பேசுகிறார். இதன் அர்த்தம் அந்த சிங்கத்துக்கு மட்டும்தான் தெரியும்போல. அப்படியே கூண்டுக்குள்ளிருந்தே அந்த பெண்ணை கட்டிப்பிடித்து உதட்டில் முத்தம் கொடுக்கிறது. இந்த பெண்ணும் அந்த சிங்கத்துக்கு முத்தமாக தருகிறார்.

தவிப்பில் புரளுகிறது
இரும்பு கம்பிகளுக்கிடையே தன் முரட்டு கைகளை வெளியே விடடு பெண்ணை இறுக்கி அணைத்து கொள்கிறது சிங்கம். பிறகு வெளியில் வர முடியாமல், அந்த பெண்ணிடம் முழுமையாக இருக்கவும் முடியாமல் தவிப்பில் தரையில் புரளுகிறது. இந்த வீடியோதான் வைரலாகி வருகிறது. கிட்டத்தட்ட 2 நிமிஷம்கூட இந்த வீடியோ இல்லை.
|
7 வருட பிணைப்பு
ஆனால் இவர்களுக்குள் இருந்த 7 வருட பிணைப்பு அதில் பளிச்சென தெரிகிறது. இந்த காட்சியை பார்க்கவே ஆச்சரியமாக உள்ளது. கட்டிப்போடும் அன்பு இருந்தால், கர்ஜிக்கும் சிங்கம் கூட கட்டுண்டு போய்விடும் என்பதற்கு உதாரணம்தான் இந்த வீடியோ!
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications