ஜெர்மன்விங்ஸ் விமான விபத்து: துணை விமானி பற்றிய புதிது புதிதாக வரும் 'திக் திக்' தகவல்கள்
டுசல்டார்ப்: மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த ஜெர்மன்விங்ஸ் துணை விமானிக்கு தொடர்ந்து உளவியல் சிகிச்சை அளிக்குமாறு லுப்தான்ஸாவின் மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர் என்று ஜெர்மனியைச் சேர்ந்த செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
லுப்தான்ஸாவின் கிளை நிறுவனமான ஜெர்மன்விங்ஸுக்கு சொந்தமான விமானத்தை வேண்டும் என்றே பிரான்சில் உள்ள ஆல்ப்ஸ் மலை மீது மோதி 150 பேர் பலியாக காரணமாக இருந்தவர் துணை விமானி ஆன்ட்ரியஸ் லுபிட்ஸ்(28). அவர் ஜெர்மனியில் உள்ள பிரான்க்பர்ட் நகர் அருகே இருக்கும் மான்டபாரைச் சேர்ந்தவர். அவர் 14 வயதில் விமானம் ஓட்டும் பயிற்சி வகுப்புகளுக்கு சென்றுள்ளார். அதன் பிறகு அவர் 2008ம் ஆண்டு லுப்தான்ஸாவின் விமானி பயிற்சி படிப்பில் சேர்ந்துள்ளார்.
இதையடுத்து அவர் அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாநிலத்தில் இருக்கும் லுப்தன்ஸா பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றார்.

மனஅழுத்தம்
2009ம் ஆண்டு லுபிட்ஸ் பயிற்சியை பாதியில் விட்டுவிட்டு சென்றுள்ளார். பின்னர் அவர் தனக்கு மன அழுத்தம் ஏற்பட்டதை லுப்தான்ஸாவிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் தொடர்ந்து உளவியல் சிகிச்சை பெற வேண்டும் என்று லுப்தான்ஸாவில் பணிபுரிந்த மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர் என்று ஜெர்மனியைச் சேர்ந்த செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

லுபிட்ஸ்
லுபிட்ஸின் மருத்துவ கோப்புகள் விமானம் விபத்துக்குள்ளான 3வது நாள் தான் தங்கள் கைகளுக்கு வந்ததாக ஜெர்மனியின் விமான போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லுபிட்ஸ் உடல் மற்றும் மன பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

தற்கொலை
லுபிட்ஸ் கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தான் ஜெர்மன்விங்ஸ் நிறுவனத்தில் சேர்ந்துள்ளார். அதற்கு முன்பே அவருக்கு தற்கொலை செய்யும் எண்ணம் அடிக்கடி ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. துணை விமானி ஆன பிறகு அவர் இயல்பாக நடந்து கொண்டுள்ளார் என்று ஜெர்மனி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவர்கள்
அண்மையில் லுபிட்ஸுக்கு தன்னையோ பிறரையோ காயப்படுத்தும் எண்ணம் இருப்பதற்கான அறிகுறிகள் எதையும் மருத்துவர்கள் கண்டறியவில்லை. அவர் உளவியல் மற்றும் நரம்பியல் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவரை சம்பவத்தன்று உள்பட பல முறை வேலையில் இருந்து விடுப்பு எடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் அவர் அதை எல்லாம் கண்டுகொள்ளவில்லை.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications