நிலவில் விழுந்து நொறுங்கிய லூனா-25 விண்கலம்! சந்திரயான்-3க்கு போட்டியாக அனுப்பிய ரஷ்யா ஷாக்
மாஸ்கோ: நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இந்தியாவுக்கு போட்டியாக ரஷ்யா அனுப்பிய லூனா-25 விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அது விழுந்து நொறுங்கிய தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் இந்தியாவை முந்தி நிலாவின் தென்துருவத்தில் விண்கலத்தை இறக்கி ஆய்வு செய்ய முயன்ற ரஷ்யாவின் நடவடிக்கை முடங்கியது.
இந்தியா விண்வெளி துறையில் சாதித்து வருகிறது. அதன்படி நிலவை ஆய்வு செய்ய சந்திரயான் -3 விண்கலத்தை இந்தியா உருவாக்கியது. கடந்த மாதம் 14ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இந்த விண்கலம் விண்ணுக்கு பாய்ந்தது. வரும் 23ம் தேதி மாலை 5.30 மணியளவில் நிலவின் தென் துருவத்தில் மெதுவாக சந்திரயான் - 3 விண்கலம் தரையிறங்க உள்ளது.

கடந்த முறை சந்திரயான் -2 விண்கலம் நிலவின் தென்துருவத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் மெதுவாக தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் நிலவில் தரையிறங்க வேண்டிய லேண்டர் விழுந்து நொறுங்கியது. இருப்பினும் ‛சந்திரயான் 2' திட்டத்தின் ஆர்ப்பிட்டர் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தான் சந்திரயான் 2 திட்டத்தில் கற்ற பாடத்தின் அடிப்படையில் தற்போது சந்திரயான் - 3 திட்டம் உருவாக்கப்பட்டது. தற்போது வரை சந்திரயான் - 3 விண்கலம் திட்டமிட்டபடி செயல்பட்டு வருகிறது. பூமி சுற்று வட்டபாதையை சுற்றி முடித்த பிறகு நிலவின் சுற்றுவட்டபாதைக்குள் நுழைந்தது. அதன்பிறகு ஆர்ப்பிட்டரில் இருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்துள்ளது. அதன்பிறகு படிப்படியாக நிலவுக்கும் விக்ரம் லேண்டருக்கமான தூரம் குறைக்கப்பட்டு வருகிறது.
கடந்த 18 ம் தேதி விக்ரம் லேண்டருக்கும் நிலவுக்குமான தூரம் குறைந்தபட்சமாக 113 எனவும், அதிகபட்சமாக 157 கிலோமீட்டர் என்ற அளவில் இருந்தது. இதையடுத்து இன்று அதிகாரலை விக்ரம் லேண்டர் நிலவை இன்னும் கிட்ட நெருங்கி உள்ளது. இன்று அதிகாலை 1.53 மணியளவில் விக்ரம் லேண்டருக்கும், நிலவுக்கும் இடையேயான தூரம் என்பது குறைந்தபட்சமாக 25 கிலோமீட்டராகவும், அதிகபட்சமாக 134 கிலோமீட்டராகவும் குறைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அடுத்தக்கட்டமாக நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டரை மெதுவாக தரையிறக்கும் பணியை இஸ்ரோ விஞ்ஞானிகள் துவங்கி உள்ளனர். 23ம் தேதி மாலை 6.04 மணிக்கு லேண்டர் நிலவில் தரையிறங்க உள்ளது. அதன்பிறகு லேண்டரில் இருந்து வெளிவரும் ரோவர் கருவி நிலவின் தென்துருவத்தை 14 நாட்கள் ஆய்வு செய்ய உள்ளது. நிலவின் தென்துருவத்தில் இதுவரை எந்த நாடுகளும் கால்பதிக்கவில்லை. இத்தகைய சூழலில் தான் இந்தியா மகத்தான சாதனையை படைக்க காத்திருக்கிறது.
இதற்கிடையே தான் இந்தியாவுக்கு போட்டியாக ரஷ்யாவும் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய லூனா 25 என்ற விண்கலத்தை அனுப்பியது. இது இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலத்தை போல் அல்லாமல் நேரடியாக நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும் என தெரிவிக்கப்பட்டது. கடந்த 10ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட இந்த விண்கலம் இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலத்துக்கு முன்பாக நாளை நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும் என தெரிவிக்கப்பட்டது. இதன்மூலம் நிலவின் தென்துருவத்தில் கால்பதிக்கும் முதல் நாடு என்ற பெருமையை இந்தியாவிடம் இருந்து தட்டிப்பறிக்க ரஷ்யா முயற்சித்தது.
விண்ணில் செலுத்தப்பட்ட லூனா 25 விண்கலம் கடந்த 17ம் தேதி வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்தது. அதன்பிறகு நிலவின் சுற்றுவட்டாபாதையை குறைக்கும் பணிகள் தொடர்ந்து நடந்தது. நாளை நிலவில் தரையிறங்கும் நிலையில் இறுதிக்கட்ட சுற்று வட்டபாதையை குறைக்கும் பணியை ரஷ்ய விஞ்ஞானிகள் செய்தர்ன. ஆனால் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் இறுதிக்கட்ட லூனா 25 விண்கலத்தின் இறுதிக்கட்ட சுற்றுவட்டாபாதையை குறைக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் ஏற்கனவே சுற்றி வந்த நிலவின் சுற்றுவட்ட பாதையிலேயே லூனா 25 விண்கலம் சுற்றி வருகிறது.
இது ரஷ்யாவின் விண்வெளி திட்டத்தில் சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் நிலவில் இதுதான் நிலவின் கடைசி சுற்றுவட்ட பாதையின் தூரம் குறைப்பாகும். அதன்பிறகு நேரடியாக நிலவின் தென்துருவத்தில் லூனா 25 விண்கலம் தரையிறங்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தரையிறங்குவதற்கு முந்தைய நிலவின் சுற்றுவட்ட பாதையில் லூனா 25 விண்கலத்தில் தூரம் குறைக்க முடியாமல் போய் உள்ளது. இருப்பினும் விண்கலத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறை விரைந்து சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது என ரஷ்யா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ராஸ்கோஸ்மோஸ் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் தான் தற்போது ரஷ்யாவுக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. அதாவது லூனா 25 விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கி உள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ரஷ்யாவின் நேரப்படி 14:57 மணிக்கு லூனா -25 விண்கலம் தரைக்கட்டுப்பாட்டு அமைப்புடன் தொடர்பை இழந்தது. இதையடுத்து லூனா- 25 விண்கலத்துடன் தொடர்பை ஏற்படுத்த முயன்றனர். இந்த முயற்சி பலனளிக்காத நிலையில் லூனா-25 விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கிய தகவலை கண்டறிந்துள்ளனர்.
இதனை ரஷ்யா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ராஸ்கோஸ்மோஸ் உறுதி செய்துள்ளது. இருப்பினும் லூனா - 25 விண்கலம் எப்படி விழுந்து நொறுங்கியது. தவறு எங்கு நடந்தது? என்பது உடனடியாக தெரியவில்லை. இதனை ரஷ்யாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ராஸ்கோஸ்மாஸ் ஆராய்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications