பெரு- பிரேசில் எல்லையை உலுக்கிய அதி பயங்கர பூகம்பம்.. பொலிவியாவும் நடுங்கியது
லிமா: பெரு நாட்டின் கிழக்குப் பகுதியில் பயங்கர நில அதிர்வு ஏற்பட்டது். இது ரிக்டர் அளவில் 7.5 அலகாகப் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரு தலைநகர் லிமாவில் இருந்து 681 கிலேமீட்டர் தொலைவில் பெரு - பிரசில் எல்லை பகுதியில் இந்த நில அதிர்வு ஏற்பட்டது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பூமிக்குக் கீழே 600 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது. பெரு, பிரேசில் நாடுகளின் எல்லைப் பகுதியில் இந்த நிலநடுக்கம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அருகில் உள்ள பொலிவியா நாட்டிலும் பூகம்ப அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.
பூகம்பத்தின் மையப் பகுதியானது, பெரு நாட்டின் இபேரியா நகரிலிருந்து 175 கிலோமீட்டர் தொலைவில் அமேசான் வடிநிலப் பகுதியில் இருந்துள்ளது. இந்தப் பகுதியானது பிரேசிலின் பிரேசிலியா நகரிலிருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
நில அதிர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த தகவல்கள் இன்னும் தெரியவில்லை. நில அதிர்வால் பல்வேறு நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கின. இது சக்தி வாய்ந்த பூகம்பம்தான் என்ற போதிலும் அதிக ஆழத்தில் ஏற்பட்டிருப்பதால், சுனாமி வர வாய்ப்பில்லை எனவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications