Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

11 ஆண்டுகளுக்கு முன்.. 239 பேருடன் காணாமல் போன.. MH370 விமானத்தை மீண்டும் தேடும் மலேசியா!

Subscribe to Oneindia Tamil

கோலாலம்பூர்: 239 பேருடன் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன MH370 விமானத்தை மலேசியா மீண்டும் தேட தொடங்கியுள்ளது. இந்த விமானத்தை கண்டுபிடிக்க அமெரிக்கவை சேர்ந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறது.

இதுவரை நடந்த விமான விபத்துகளிலே, MH370 விமான விபத்துதான் பல்வேறு தரப்பினர் மத்தியில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. கப்பல் விபத்துக்களில் டைடானிக் போல, விமான விபத்துக்களில் MH370 விமானம் பெயர் பெற்றிருக்கிறது.

Malaysia flight

விபத்து எப்படி நடந்தது?

மலேசிய ஏர்லைன்சுக்கு சொந்தமான போயிங் 777 ரகத்தை சேர்ந்த MH370 விமானம், கடந்த 2014ம் ஆண்டு மார்ச் மாதம் 8ம் தேதி, நள்ளிரவு 12.41 மணிக்கு 227 பணிகள் மற்றும் 12 விமான ஊழியர்களுடன், கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங் நோக்கி புறப்பட்டது. சரியாக நள்ளிரவு 1.19 மணியளவில் 'குட்நைட் மலேசியன் 370' என்று விமானி பேசியிருக்கிறார். அதுதான் விமானத்திலிருந்து வந்த கடைசி தகவல். தெளிவான வானிலை, தொழில்நுட்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லை, தரையில் உள்ள கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பு என அனைத்தும் இருந்தபோதிலும் சில மணி நேரங்களில் விமானம் திடீரென காணாமல் போய்விட்டது.

ரேடார் சிக்னல்

விமானம் வானத்தில் பறந்துக்கொண்டிருக்கிறது எனில், எங்கு இருக்கிறது? எவ்வளவு உயரத்தில் இருக்கிறது என்பது குறித்து தெரிந்துக்கொள்ள 'டிரான்ஸ்பாண்டர்' பயன்படும். அதாவது தரையில் உள்ள கட்டுப்பாட்டு மையத்திலிருந்து விமானத்திற்கு ஒரு சிக்னல் அனுப்பப்படும். அந்த சிக்னலை டிரான்ஸ்பாண்டர் பெற்று, தானாகவே சிக்னலை திருப்பியனுப்பும். இதை வைத்துதான் விமானம் எங்கு இருக்கிறது? எவ்வளவு உயரத்தில் இருக்கிறது என்பது குறித்து தெரிந்துக்கொள்ள முடியும்.

2 நிமிடங்களில் மறைந்த விமானம்

பிரச்சனை என்னவெனில், MH370 விமானம் சரியாக நள்ளிரவு 1.21 மணியளவில் டிரான்ஸ்பாண்டரிலிருந்து தரை கட்டுப்பாட்டு அறைக்கு சிக்னல் வரவில்லை. அதேபோல ரேடாலிருந்தும் விமானம் மறைந்துவிட்டது. இந்த டிரான்ஸ்பாண்டரை விமானியாலும், விமான பணியாளர்களாலும் மட்டுமே மறைக்க முடியும். என்னதான் டிரான்ஸ்பாண்டரிலிருந்து சிக்னல் வரவில்லை என்றாலும், ராணுவ ரேடார் வலையத்திலிருந்து விமானம் தப்பிக்க முடியாது. எனவே மலேசிய சிவில் விமான போக்குவரத்துத்துறை ராணுவத்தின் உதவியை நாடியது.

விபத்தில் சிக்கிய விமானம்

ராணுவம் விமானத்தை கண்காணிக்க தொடங்கியது. விமானம் தொடர்ந்து பறந்துக்கொண்டிருப்பதை ராணுவ ரேடார் உறுதி செய்தது. ஆனால், விமானத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை. விமானம் தனது பாதையிலிருந்து திரும்பி மலாய் தீபகற்பத்தை நோக்கி பயணித்தது. பின்னர் அது அந்தமான் நோக்கி திரும்பியது. ஒரு கட்டத்தில் மலேசிய ராணுவ ரேடாரிலிருந்தும் விமானம் மறைந்தது. இருப்பினும், பிரிட்டிஷ் செயற்கைக்கோளான இன்மார்சாட்-ன் ரேடாரில் தெரிந்துக்கொண்டிருந்தது. பின்னர் மறைந்துவிட்டது. தொடர்ந்து 7 மணி நேரம் பயணித்து பின்னர் அது காணாமல் போனது.

மீண்டும் தேடுதல் வேட்டை

இந்த விமானத்தை கண்டுபிடிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் பலன் கொடுக்கவில்லை. ஆப்பிரிக்கக் கடற்கரை மற்றும் இந்தியப் பெருங்கடல் தீவுகளில், விமானத்தின் பாகங்கள் என நம்பப்படும் உதிரி பாகங்கள் கரை ஒதுங்கியுள்ளன. இருப்பினும் பிளாக் பாக்ஸ் அல்லது விமானத்தில் பெரிய பாகம் ஏதாவது கண்டுபிடிக்கப்பட்டால்தான் என்ன நடந்தது என்ற முடிவுக்கு வர முடியும் என புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.

இப்படி இருக்கையில், ஓஷன் இன்ஃபினிட்டி எனும் அமெரிக்க நிறுவனம் விமானத்தை தேட ஒப்புக்கொண்டிருக்கிறது. விமானம் கண்டுபிடிக்கப்பட்டால் ரூ.631 கோடியை கொடுப்பதாக மலேசிய அரசு ஒப்புக்கொண்டிருக்கிறது. தென்னிந்திய பெருங்கடலில் சுமார் 15,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும். கடந்த 2018 முதல ஓஷன் இன்ஃபினிட்டி தேடுதல் பணிகளில் ஈடுபட்டிருந்தாலும், இதுவரை எதையும் கண்டுபிடிக்கவில்லை. எனவே இந்த தேடுதல் இடையில் நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் தொடங்கப்பட்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+