இஸ்லாமியர்கள் அல்லாத பிற மதப் பத்திரிக்கைகள் ‘அல்லா’ என்ற சொல்லை பயன்படுத்த தடை
கோலாலம்பூர்: மலேசியாவில் இஸ்லாமியர்கள் அல்லாத பிற மதப் பத்திரிக்கைகள் ‘அல்லா' என்றச் சொல்லைப் பயன் படுத்த தடை விதித்து மலேசிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு மலேசிய கீழ்நீதிமன்றம் ஹெரால்ட் என்ற கிறிஸ்தவப் பத்திரிக்கைக்கு அல்லா என்ற வார்த்தையைப் பயன் படுத்த அனுமதி வழங்கி தீர்ப்பளித்தது.
இந்நிலையில் மீண்டும் இதே பிரச்சினை குறித்து தொடரப்பட்ட வழக்கில், நேற்று மலேசிய நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அடங்கிய குழு, இஸ்லாமியர்கள் அல்லாத பிற மதப் பத்திரிக்கைகள் ‘அல்லா' என்ற சொல்லைப் பயன் படுத்தக் கூடாது என பரபரப்புத் தீர்ப்பளித்துள்ளனர்.
மேலும், இத்தீர்ப்பில் அவர்கள் தெரிவித்துள்ள கருத்தாவது, ‘கிறிஸ்துவ மத நம்பிக்கையின் ஒரு பகுதியாக இந்த அல்லா என்ற வார்த்தை கட்டாயம் இல்லை என்பதாலும், கடவுளைக் குறிக்க அல்லா என்ற வார்த்தை முஸ்லிம்களுக்கு மட்டுமே உரியது என்பதால், மற்றவர்கள் குறிப்பிடுவதில் குழப்பம் ஏற்படும் என்பதாலும் இந்த முடிவை எடுத்துள்ளதாக நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். இதே கருத்தைத்தான் மலேசிய அரசும் நீதிமன்றத்தில் எடுத்துரைத்து வாதிட்டது. மேலும், 2008ல் பொதுமக்களின் மன நிலைக்கு ஏற்ப, பத்திரிகையில் இந்த வார்த்தையை பயன்படுத்த அனுமதித்த உள்துறை அமைச்சகத்தின் முடிவை தடை செய்வதாகவும்' கூறியுள்ளது.
மலேசியாவில் உள்ள கத்தோலிக்க மதத்தின் செய்தித்தாள்கள் சார்பில் வழக்குரைஞர்கள் தாக்கல் செய்த மனுவில், மலேசியாவிலும், மலேசியாவை அடுத்த புருனே தீவிலும் நூற்றாண்டுகளாக மலாய் பேசும் கிறிஸ்துவர்கள் அல்லா என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகின்றனர் என தங்கள் பக்க நியாயத்தை எடுத்துரைத்தார்கள்.
மேலும், மத உணர்வுக்கு எதிரான இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மலேசியாவின் உச்ச நீதிமன்றத்தை அணுகுவோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தீர்ப்பு வழங்கப்பட்ட போது, 200க்கும் அதிகமான முஸ்லிம்கள் நாட்டின் தலைமையிடமான புத்ராஜெயாவுக்கு வெளியே கூடியிருந்து இத்தீர்ப்புக்கு வரவேற்பு அளிக்கும் வகையில், "அல்லாஹு அக்பர்" என்று கோஷமிட்டது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, மலேசிய சிறுபான்மை மக்களின் உரிமை விவகாரத்தில் தலையிடும் முடிவு என்ற அளவில் மத ரீதியான பதற்றம் உருவாக வழி வகுக்கும் என்று அஞ்சப்படுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications