அடுத்த பரபரப்பு.. பிரதமர் முகைதீன் யாசின் திடீர் பதவி விலகல்.. உச்சக்கட்ட குழப்பத்தில் மலேசிய அரசு
மலேசிய பிரதமர் ராஜினாமா செய்துள்ளார்
மலேசியா: மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் தலைமையிலான அரசு திடீரென ராஜினாமா செய்துள்ளது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவை இழந்ததையடுத்து மலேசிய பிரதமர் இந்த ராஜினாமா செய்துள்ளார்... இதற்கான ராஜினாமா கடிதமும் மன்னரிடம் அளிக்கப்பட்டுள்ளது..!
மலேசியாவை பொறுத்தவரை கடந்த வருடம் முதலே கொரோனா வைரஸ் அளவுக்கு அதிகமாக தாக்கி வருகிறது..
அப்போது முதல் தடுப்பு நடவடிக்கைகளை கையாண்டாலும், தொற்று நெருக்கடியை சமாளிக்க முடியவில்லை... அத்துடன் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதிலும் ஆளும் பெரிக்கத்தான் நேசனல் அரசாங்கம் தோல்வி அடைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டை வைத்தபடியே இருந்தன.

ஒப்புதல்
இப்படிப்பட்ட சூழல்தான், அந்த நாட்டில் பிறப்பிக்கப்பட்ட அவசரநிலை சட்டங்களை கடந்த 21ம் தேதி திரும்பப் பெற்றுவிட்டதாக அரசாங்கம் தெரிவித்து, அது மிகப்பெரிய பரபரப்பையும் ஏற்படுத்தின... அதாவது, அவசரநிலை சட்டங்களை திரும்ப பெறுவதற்கு, மலேசிய மாமன்னரின் ஒப்புதல் ரொம்ப முக்கியம்..

மோதல்
ஆனால், அதை பெற அரசாங்கம் தவறிவிட்டதாகவும், தன்னுடைய ஒப்புதல் இன்றி அரசு செயல்பட்டு விட்டதாகவும் மாமன்னரே அந்த சமயத்தில் அதிருப்தியை வெளியிட்டிருந்தார். இங்குதான் இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட ஆரம்பித்தது.. அரசுக்கும் அரண்மனைக்கும் கருத்து வேறுபாடு முற்றியது.. அதனால், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத அரசு பதவி விலக வேண்டும் என்று அடுத்த கோரிக்கையை எதிர்க்கட்சிகள் முன்வைத்தன.

வைரஸ் பரவல்
அதைதவிர, பல மாதங்களாக நீடித்து வந்த அவசரநிலையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும், கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள், பொருளாதாரத்தை மீட்டெடுத்தல், தேசிய தடுப்பூசித் திட்டம், தேசிய மீட்புத் திட்டம் போன்றவை குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அழுத்தம் தந்தன. பிரதமர் பதவி விலக வேண்டும் என்று பல போராட்டங்களையும் கையில் எடுத்தன.

பரபரப்பு
ஏற்கனவே கடந்த வருடம் இப்படித்தான் மலேசியாவில் கூட்டணி அரசில் ஒரு குழப்பம் ஏற்பட்டு, பிரதமர் பதவியில் இருந்து மகாதீர் விலகினார்.. அவருக்கு பிறகு முகைதின் யாசின் பதவி ஏற்றார்... ஆனால், இவரையும் பதவி விலக செய்யுமாறு கோரிக்கைகள் எழுந்தது, மிகப் பெரிய அரசியல் பரபரப்பை கடந்த சில நாட்களாகவே தந்து கொண்டிருந்தது.

பெரும்பான்மை
அதாவது, யாசின் தலைமையிலான கூட்டணி அரசில் அங்கம் வகித்து வந்த ஐக்கிய மலாய் தேசிய அமைப்பு கூட்டணியிலிருந்து விலகியதுமே, யாசின் அரசு தன்னுடைய பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்டது. இவருக்கு அளித்த ஆதரவை கூட்டணி கட்சி எம்பிக்கள் 15 பேர் திரும்ப பெற்றனர். இதுதான் யாசின் நிர்வாகம் பெரும்பான்மையை இழக்க முக்கிய காரணம்.. ஆனாலும் யாசின் இதை ஒப்புக் கொள்ளவே இல்லை.. தன்னுடைய அரசுக்கு மெஜாட்டி இருக்கிறது, அடுத்த மாதம் நிரூபிக்க போகிறேன் என்று சொல்லி கொண்டே இருந்தார்.

பரபரப்பு
இந்த நிலையில் திடீர் திருப்பமாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் உள்ளன.. பிரதமர் முகைதின் யாசின், மன்னரை நேரில் சந்தித்து தன்னுடைய ராஜினாமா கடிதத்தையும் தந்துவிட்டாராம்.. இதனால் மலேசிய அரசியல் களத்தில் மேலும் அனல் சூழ்ந்துள்ளது.. இதனால், 17 மாத கால யாசினின் ஆட்சி மலேசியாவில் முடிவுக்கு வந்து உள்ளது. அதுமட்டுமல்ல, மலேசியாவில் அடுத்த பிரதமர் யார் என்று குழப்பம் உருவாகிவிட்டது.. புதிய பிரதமராக எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராஹிம் பதவியேற்க வாய்ப்பு உள்ளதாக தகவல்களும் வந்துள்ளதால், அது அந்நாட்டு அரசியலை உச்சக்கட்ட பரபரப்பில் கொண்டுபோய் வைத்துள்ளது..
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications