இந்தியாவிற்கு மிக அருகே! சீன உளவுக்கப்பல்.. உள்ளே விட்ட மாலத்தீவு! என்ன நடக்கும் இந்திய பெருங்கடலில்
மாலத்தீவு: மாலத்தீவுடனான இந்தியாவின் உறவில் விரிசல் ஏற்பட்டு வரும் நிலையில்.. தற்போது புதிதாக இன்னொரு பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. சீனாவின் ஆராய்ச்சி உளவு கப்பல் ஒன்றை மாலத்தீவு தங்கள் நாட்டிற்குள் அனுமதித்து உள்ளது.
இந்த கப்பலின் ஆராய்ச்சி நடவடிக்கைகள் குறித்து இந்தியாவின் எச்சரிக்கைகளை, கவலைகளைப் பொருட்படுத்தாமல், சியாங் யாங் ஹாங் 03 என்ற சீனக் கப்பலை மாலத்தீவு தங்கள் நாட்டு கடல் எல்லைக்குள் அனுமதித்து உள்ளது. இந்தியாவின் எதிர்ப்பை மீறி இந்த கப்பலை மாலத்தீவு உள்ளே அனுமதித்து உள்ளது. துறைமுக பணியாளர்களை மாற்றுவதற்கும், சர்வீஸ் செய்வதற்கும் மட்டும் இந்த கப்பலை உள்ளே அனுமதிப்பதாக மாலத்தீவு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதாவது இந்த சீன கப்பல் எந்த உளவு பணிகளையும் செய்யாது என்று மாலத்தீவு வெளியுறவு அமைச்சகம் கூறி உள்ளது. இருப்பினும் சீனாவின் உளவுக்கப்பல் மாலத்தீவில் இருந்து கொண்டு இந்தியாவை உளவு பார்க்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதற்கு முன் இலங்கை இதேபோல் சீனாவின் உளவுக்கப்பல்களை உள்ளே விட்டது. அதன்பின் இந்தியாவின் தொடர்ச்சியான ஆட்சேபனைகளுக்குப் பிறகு இலங்கை, கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவியல் மற்றும் இராணுவ நோக்கங்களுக்காக தரவுகளை சேகரிக்கக்கூடிய சீனாவின் ஆராய்ச்சி, ஆய்வுக் கப்பல்களின் வருகைகளுக்கு 1 ஆண்டு தடையை அறிவித்தது.
அதாவது சீனாவின் சீனாவின் ஆராய்ச்சி, ஆய்வுக் கப்பல்கள் உளவு செய்வதற்காக இலங்கை கடல் எல்லைக்குள் வரக்கூடாது என்று உத்தரவிட்டது. இப்படிப்பட்ட நிலையில்தான் இலங்கை தடைக்கு இடையே தற்போது மாலத்தீவிற்குள் சீனாவின் உளவுக்கப்பல் சென்றுள்ளது.
இரண்டு நாட்டு மோதல்: கடந்த ஜனவரி 4 ஆம் தேதி, பிரதமர் மோடியின் லட்சத்தீவில் உள்ள இந்தியாவின் கடற்கரைகளின் அழகைப் புகழ்ந்து போஸ்ட் செய்து இருந்தார். இந்த போஸ்ட் காரணமாக கோபம் அடைந்த மாலத்தீவை சேர்ந்த அமைச்சர்கள் சிலர் இந்தியாவை விமர்சனம் செய்து இருந்தனர். மூன்று மாலத்தீவு அமைச்சர்கள் இந்தியப் பிரதமரை கடுமையாக விமர்சித்தனர். அதோடு இந்தியர்களின் தூய்மை , இந்தியாவில் உள்ள கடல் பகுதிகளின் தூய்மையையும் விமர்சனம் செய்திருந்தனர்.
இது இரண்டு நாடுகளுக்கு இடையில் மோதலாக மாறியது. அதோடு மாலத்தீவின் புதிய ஜனாதிபதி மொஹமட் முய்ஸு, இந்திய படைகள் மாலத்தீவை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை உருவாக்க போவதாகவும், இந்தியாவுடனான உறவில் மாற்றங்களை செய்ய போவதாகவும் அறிவித்தார். அதேபோல் சீனாவுடனான உறவுகளை மேம்படுத்த போவதாகவும் அறிவிப்பு வெளியிட்டார்.
மோதல் உச்சம்: இதன் காரணமாகவே இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் கடந்த சில காலமாக மோதல் தொடர்ந்து கொண்டே வருகிறது. மாலத்தீவில் இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் முய்ஸு சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டவர்.
இதன் காரணமாகவே அவர் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். அவரது அமைச்சர்கள் சிலர் பிரதமர் மோடி குறித்து கருத்துகளைக் கூறியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி மாலத்தீவுடனான இந்தியாவின் உறவில் விரிசல் ஏற்பட்டு வரும் நிலையில்.. தற்போது புதிதாக இன்னொரு பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. சீனாவின் ஆராய்ச்சி உளவு கப்பல் ஒன்றை மாலத்தீவு தங்கள் நாட்டிற்குள் அனுமதித்து உள்ளது.
பாதுகாப்பு ரீதியாக இந்தியாவிற்கு இந்த விவகாரம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications