"இந்தியர்கள் தந்த மரண அடி!" அதள பாதாளத்திற்கு சென்ற சுற்றுலா! இறங்கி வரும் மாலத்தீவு! என்ன நடக்கிறது
மாலே: மாலத்தீவுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை கடுமையாகக் குறைந்துள்ள நிலையில், அதை மீட்டெடுக்க அந்நாட்டுச் சுற்றுலாத் துறை முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தியா மாலத்தீவுக்கு இடையே கடந்த சில மாதங்களாகவே நல்லுறவு இல்லை. பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து தெரிவித்த சர்ச்சை காரணமாக மாலத்தீவுக்குச் சுற்றுலா செல்வதை இந்தியர்கள் புறக்கணித்து வருகிறார்கள்.

இதற்கிடையே இழந்த இந்தியச் சுற்றுலாப் பயணிகளை மீண்டும் மாலத்தீவுக்கு ஈர்க்கும் வகையில், அங்குள்ள உள்ள ஒரு முக்கிய சுற்றுலா அமைப்பு, இந்தியாவின் முக்கிய நகரங்களில் ரோட்ஷோ நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.
சுற்றுலாப் பயணிகள்: மாலத்தீவிற்குச் செல்லும் இந்தியச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதால், MATATO எனப்படும் மாலதீவுகள் சுற்றுலா முகவர்கள் மற்றும் சுற்றுலா நடத்துநர்கள் சங்கம் முதலில் இரு நாடுகளுக்கும் இடையிலான பயண மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவது குறித்து இந்தியத் தூதர் முனு மஹாவருடன் கலந்துரையாடினார். அதைத் தொடர்ந்து ரோட் ஷோ நடத்தப்படும் என்று அறவிக்கப்பட்டது.
கடந்த ஜனவரி மாதம் லட்சத்தீவு சென்றிருந்த பிரதமர் மோடி அங்கு எடுக்கப்பட்ட அழகிய போட்டோக்களை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். அதற்கு மாலத்தீவு இணை அமைச்சர்கள் மிக மோசமான கருத்துகளைக் கூறவே இரு நாட்டு உறவு மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அதன் பிறகு பல பிரபலங்கள் உட்பட ஏராளமான இந்தியர்கள் மாலத்தீவு செல்ல புக் செய்த ஹோட்டல் மற்றும் விமான டிக்கெட்களை கேன்சல் செய்தனர். மேலும், மாலத்தீவைப் புறக்கணிப்போம் என்று வெளிப்படையாக அறிவித்தனர்.
இந்தியர்கள் எண்ணிக்கை: இதனால் மாலத்தீவுக்குச் செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது. முதலில் மாலத்தீவுக்குச் செல்லும் டாப் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்த நிலையில், அது இப்போது 6ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. மாலதீவுகளின் சுற்றுலா அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின்படி, இந்த ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி வரை மாலத்தீவுக்கு மொத்தமாக 6,63,269 சுற்றுலாப் பயணிகள் சென்றுள்ளனர்.
அதில் அதிகபட்சமாகச் சீனாவில் இருந்த 71,995 சுற்றுலாப் பயணிகள் சென்றுள்ளனர். தொடர்ந்து இங்கிலாந்து (66,999), ரஷ்யா (66,803), இத்தாலி (61,379), ஜெர்மனி (52,256) நாடுகள் இருக்கும் நிலையில், 37,417 சுற்றுலா பணிகளுடன் இந்தியா அடுத்த இடத்தில் இருக்கிறது.
முக்கிய முடிவு: மாலேயில் உள்ள இந்தியத் தூதருடன் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு MATATO அமைப்பு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சுற்றுலாவை மேம்படுத்த மாலத்தீவில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் இணைந்து பயணிக்க விரும்புவதாக அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், "முக்கிய இந்திய நகரங்களில் ரோட் ஷோ நடத்த உள்ளோம். ஊடகங்கள் இன்புளுயன்சர்கள் எளிதாக மாலத்தீவு வந்து செல்லவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மாலத்தீவிற்கு இந்தியா ஒரு முக்கியமான சுற்றுலா சந்தையாக இருக்கும் அதே வேளையில், இதை மேலும் மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது. மாலத்தீவு இந்தியத் தூதரகமும் இந்த ஆலோசனைக் கூட்டம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பிராந்தியத்தின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுப்போம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியா மாலத்தீவு மோதல்: இந்தியா மாலத்தீவுக்கு இடையேயான சிக்கல் ஜனவரியில் தொடங்கியது இல்லை. இப்போது மாலத்தீவு அதிபராக இருக்கும் முகமது முய்ஸு எப்போது அதிபர் தேர்தலில் வென்றாரோ.. அப்போது முதலே இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவு இல்லை. சீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட அவர், அதிபர் தேர்தலில் வென்ற உடனேயே அங்கு மாலத்தீவுக்கு மிகப் பெரியளவில் உதவிய மருத்துவ ஹெலிகாப்டர்களை கையாண்ட இந்திய ராணுவத்தினரை வெளியேறச் சொன்னது குறிப்பிடத்தக்கது.
-
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
இந்தியா மிஸ் செய்த பொக்கிஷம்.. இப்போ அமெரிக்காவே அலறுதே! கேம் சேஞ்சர் மிக்-35 -
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 8வது ஊதியக்குழு வந்தால்.. பண மழை! எவ்வளவு கிடைக்கும்னு பாருங்க -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
துபாயில் கோர விபத்து.. இந்தியர்கள் துடிதுடித்து மரணம்.. நொடியில் நேர்ந்த பயங்கரம்.. என்ன நடந்தது? -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
அந்த 3 கேள்விகள்! பதில் சொல்ல கூட முடியாமல் திணறல்! Starlink சேவையை இந்தியாவில் தொடங்குவதில் சிக்கல் -
இந்தியா கூட்டணியில் மிஸ்ஸான விஜய் கட்சி.. காங்கிரஸ் ஒன்னு சொல்ல.. திருமா வேற சொல்ல..! பெரிய குழப்பம் -
இந்தியர்கள் இருந்த படகை குறிவைத்து தாக்குதல்.. நடுக்கடலில் தத்தளித்த 24 பேர்.. திக்திக் சம்பவம்












Click it and Unblock the Notifications