பூட்டிய விமானத்தில் தூங்கிய பயணி... செல்போன் மூலம் காப்பாற்றிய தோழி
லூசியானா: விமானப் பயணி ஒருவர் பயணத்தின் போது அசந்து தூங்கியதால், இறங்க வேண்டிய இடத்தில் இறங்காமல், விமானத்தோடு வைத்து பூட்டப் பட்டு விட்டார். பின்னர், தோழிக்கு கிடைத்த தகவல் மூலம் அவர் பத்திரமாக மீட்கப் பட்டுள்ளார்.
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்திலிருந்து ஹூஸ்டன் புறப்பட்டுச் சென்ற விமானத்தில் பயணம் செய்த வாக்னர் என்ற பயணி ஒருவர் ஜன்னலோர சீட்டில் அமர்ந்தபடி நன்கு உறங்கி விட்டாராம்.
இதனால், ஹூஸ்டன் விமான நிலையத்தில் அந்நபர் இறங்கவில்லை. விமானத்தில் வாக்னர் உறங்கிக் கொண்டிருப்பதை விமான ஊழியர்களும் கவனிக்கத் தவறி விட்டனர். பயணிகள் இறங்கி விட்டதும், விமானம் அது நிறுத்தப்படவேண்டிய இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு கதவுகள் அடைக்கப்பட்டு விட்டன.
சிறிதுநேரம் கழித்து வாக்னர் கண் விழித்துப் பார்த்துள்ளார். சுற்றிலும் ஒரே கும்மிருட்டாக இருந்துள்ளது. அப்போது தான், தான் விமானத்திற்குள்ளாகவே இருப்பது அவருக்கு தெரிய வந்துள்ளது. உடனடியாக தனது செல்போனை எடுத்துப் பார்த்துள்ளார்.
அவரது அதிர்ஷ்டம், சிக்னல் இருந்துள்ளது. உடனடியாக தனது தோழியை அழைத்து தான் அடைபட்டுள்ள விஷயத்தைத் தெரியப் படுத்தியுள்ளார். முதலில் வாக்னர் விளையாடுகிறார் என எண்ணிய தோழி, பின்னர் உண்மை நிலையை உணர்ந்து உடனடியாக இது குறித்து விமானநிலைய அதிகாரிகளுக்குத் தெரியப் படுத்தியுள்ளார்.
தகவலறிந்து விரைந்து வந்த அதிகாரிகள் உடனடியாக வாக்னரை மீட்டு, கவனக் குறைவாக நிகழ்ந்த தவறுக்கு ஈடாக 250 டாலர்கள் தொகையைக் கொடுத்துள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications