நேபாளத்தில் 80 மணநேரம் 3 பிணங்களுடன் இடிபாடுகளில் சிக்கியிருந்த வாலிபர் மீட்பு
காத்மாண்டு: காத்மாண்டுவில் நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு மூன்று பிணங்களுடன் இடிபாடுகளில் சிக்கியிருந்த வாலிபர் 80 மணிநேரம் கழித்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
நேபாளத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் பலியானோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் தலைநகர் காத்மாண்டுவில் மீட்பு குழுவினர் ரிஷி கனால்(28) என்ற வாலிபரை இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்டுள்ளனர்.

ரிஷி 80 மணிநேரமாக இடிபாடுகளில் 3 பிணங்களுடன் இருந்துள்ளார். முன்னதாக காத்மாண்டுவில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள இந்தியாவைச் சேர்ந்த தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் இடிபாடுகளில் சிக்கி 50 மணிநேரம் போராடிய பெண் ஒருவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இடிபாடுகளை அகற்ற அகற்ற பிணங்களாக வருகின்றன. கிராமப்புறங்களுக்கு செல்லும் பாதைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் அங்கு மீட்பு பணி மேற்கொள்வதில் சிக்கலாக உள்ளது.
அரசின் மீட்பு பணி ஆமை வேகத்தில் நடப்பதாகக் கூறி பல்வேறு இடங்களில் மக்கள் வெறுங்கையால் இடிபாடிகளை அகற்றி தங்களின் உறவினர்களின் உடல்களை தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications