சரமாரி துப்பாக்கி சூடு! கண்ணிமைக்கும் நேரத்தில் சரிந்த மனித உடல்கள்! ஜெர்மன் தேவாலயத்தில் 7 பேர் பலி
மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் வரை பலியாகியுள்ளனர்
பெர்லின்: வடக்கு ஜெர்மனியில் நேற்றிரவு மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல பலரும் இதில் படுகாயமடைந்துள்ளனர்.
வடக்கு ஜெர்மனின் ஹம்பர்க் நகரில் உள்ள தேவாலயத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. ஹம்பர்க் நகரம் ஜெர்மனின் இரண்டாவது பெரிய நகரமாகும். இந்த நகரம் எப்போதும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும். இந்நிலையில், நேற்றிரவு 9.15 மணியளவில் இங்குள்ள ஒரு தேவாலயத்தில் பலத்த வெடி சத்தம் கேட்டிருக்கிறது. அதன் பின்னர் மக்கள் தேவாலயத்திலிருந்து பதறி அடித்துக்கொண்டு ஓடி வருவதை சிலர் பார்த்திருக்கிறார்கள்.

இதனையடுத்து தப்பி வந்தவர்கள் தேவாலயத்திற்குள் துப்பாக்கிச்சூடு நடப்பதாக கூறியுள்ளனர். பின்னர் காவல்துறையினருக்கு அவசர அழைப்புகள் சென்றிருக்கிறது. ஆனால் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சேர்வதற்குள் எல்லாம் நடந்து முடிந்துவிட்டிருக்கிறது. சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், "எங்களுக்கு இந்த தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு நடப்பதாக அழைப்பு வந்தது. ஆனால் நாங்கள் வந்து பார்த்தபோது உள்ளே யாரும் இல்லை.

கிட்டத்தட்ட 6-7 பேரின் உடல்கள் மட்டும் ரத்த வெள்ளத்தில் இருந்துள்ளன. அதேபோல, சிலர் படுகாயங்களுடன் துடித்துக்கொண்டிருந்தனர். இதனையடுத்து காயங்களுடன் இருப்பவர்களை முதலில் நாங்கள் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றோம். பின்னர் உயிரிழந்தவரை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். தாக்குதலுக்கான முழுமையான காரணம் என்ன? என்பது குறித்து எதுவும் தெரியவில்லை. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் கொலையாளி யார் என்பதையும் எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனை கண்டறிந்தால்தான் கொலைக்கான நோக்கம் குறித்து தெரியவரும்.
இதில் கொலையாளி ஒருவேளை தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்து இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்திருக்கிறது. எனவே உயிரிழந்தவர்களின் விவரம் குறித்த தகவல்களை சேகரித்து வருகிறோம். அவர்கள் யார்? எப்போது ஹம்பர்க் நகரத்திற்கு வந்தார்கள்? அவர்களுக்கு ஏதேனும் குற்ற பின்னணி இருக்கிறதா? என்று விசாரணை நடத்தி வருகிறோம். உண்மையான விஷயம் எதுவும் தெரியாமல் பொதுமக்கள் வதந்தி கிளப்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளோம்" என்று கூறியுள்ளனர். இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications