இந்தோனேசியாவில் கடும் நிலச்சரிவு: 90க்கும் மேற்பட்டோர் பேர் கதி என்ன? 18 உடல்கள் மீட்பு!
ஜகார்த்தா: இந்தோனேசியாவின் ஜாவா தீவில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கிய 90க்கும் மேற்பட்டோரின் கதி என்ன என்பது தெரியவில்லை. இதுவரை 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்தோனேசியா 17 ஆயிரம் தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய நாடு. இங்கு பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் இங்கு ஆண்டு தோறும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கடும் சேதம் ஏற்படுகிறது.

தற்போது அங்கு பலத்த மழை கொட்டுகிறது. இதனால் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. ஜாவா தீவு நேற்று பெய்த மழைக்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மத்திய ஜாவா மாகாணத்தில் உள்ள பஞ்சனேகரா மாவட்டம் மலைகளால் ஆனது. அங்கு நேற்று பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் 105 வீடுகள் மண்ணில் புதைந்தன.
உடனே ராணுவவீரர்கள், போலீசார் மற்றும் கிராம மக்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்களில் 68 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். இவர்களில் 4 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இதனிடையே மண்ணில் புதையுண்டு உயிரிழந்த 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.. மேலும் 90க்கும் மேற்பட்டோரை பேரை காணவில்லை. அவர்களும் மண்ணில் புதைந்து பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications