அட இங்க பாருங்க.. பாகிஸ்தான், வங்கதேசம் இந்தியாவுலதான் இருக்காமே.. ம.பி.யில் வைத்துள்ள சர்ச்சை மேப்!
இந்தூர்: மத்திய பிரதேச மாநிலத்தில் வைக்கப்பட்டுள்ள வரைபடத்தில் பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை உள்ளிட்ட நாடுகள் இந்தியாவின் பகுதியில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஃபுட்டி கோதி சதுக்கத்தில் நிறுவப்பட்ட வரைபடம்(மேப்) தான் இந்த சர்ச்சைக்கு எல்லாம் காரணம்.

இந்தியாவில் பாகிஸ்தான்
இந்த வரைபடத்தில் பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் இந்தியாவின் பகுதியில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இந்தூர் மாநகராட்சி நிர்வாகம் இந்த வரைபடத்தை ஃபுட்டி கோதி பகுதியில் நிறுவி உள்ளதாக கூறப்படுகிறது. பாஜக ஆட்சி நடைபெறும் மத்திய பிரதேசத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த வரைபடத்துக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

நோக்கம் என்ன?
இது தொடரபாக மத்திய பிரதேச காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அமீன் உல்கான் சூரி கூறியதாவது:- அகண்ட பாரத்தின் வரைபடத்தை மாநகராட்சி தயாரித்த விதம் மூலம் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? என்று நாங்கள் கேட்க விரும்புகிறோம். இந்த வரைபடத்தை வைப்பதன் பின்னணியில் உள்ள நோக்கம் என்ன/ என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்

வெளியுறவுக் கொள்கையில் தாக்கம்
இந்த வரைபடம் மூலம் ஆர்.எஸ்.எஸ் விரும்பிய அகண்ட பார்வை வெளிப்படுகிறது. நகராட்சி அதிகாரிகள் தங்கள் ஆர்.எஸ்.எஸ் எஜமானர்களை கவருவதற்காக இந்த வரைபடத்தை வைத்துள்ளனர். இல்லையெனில் இதில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பெரிய திட்டமிடல் இருந்தால் அவர் அதை நாட்டின் முன் வைக்க வேண்டும். இந்த வரைபடம் வெளியுறவுக் கொள்கையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். பிற நாடுகளுடன் உராய்வு ஏற்படக்கூடும் என்று அமீன் உல்கான் சூரி தெரிவித்தார்.

வைத்தது யார்?
இது தொடர்பாக பா.ஜ.க எம்.பி.சங்கர் லால்வானி கூறுகையில், ' இந்த வரைபடம் ஒருவரின் கற்பனையாக இருக்கலாம். வரைபடத்தை யார் வைத்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒரு விஷயம். கடந்த காலங்களில் இந்தியாவின் எல்லைகள் வெகு தொலைவில் இருந்தன என்பதையும் நாம் மறுக்க முடியாது' என்றார். இது குறித்து இந்தூர் மாநகராட்சியின் கூடுதல் ஆணையர் சந்தீப் சோனி கூறுகையில், 'இந்த வரைபடம் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் பழமையானது. ஃபுட்டி கோதி சதுக்கம், வேத காலத்தின் அம்சத்துடன் அதன் கருப்பொருளுடன் சீரமைக்கப்பட்டது. அப்போது இந்த மேப் நிறுவப்பட்டு இருக்கலாம்' என்றார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications