ஜிகிரி தோஸ்து..ட்ரூடோ அவுட் மார்க் இன்! இந்தியா - கனடா உறவில் மெகா மாற்றம்! என்ன சொன்னார் தெரியுமா?
ஒட்டாவா: காலிஸ்தான் விவகாரம் தொடர்பாக கனடா - இந்தியா இடையே மோதல் போக்கு நிலவி வந்த நிலையில் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகினார். இந்த நிலையில் புதிய பிரதமராக பொறுப்பேற்க உள்ள மார்க் கார்னி இந்தியாவுடன் மீண்டும் நட்பை கட்டி எழுப்ப வாய்ப்பு உள்ளது என்றும், அதனையே தான் எதிர் நோக்குவதாக தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் இந்தியா கனடாவில் பெரிய மாற்றங்கள் ஏற்பட உள்ளது.
கனடாவில் இரண்டாவது பெரிய சமூகமாக சீக்கியர்கள் இருக்கும் நிலையில், அவர்களது ஆதரவை பெற நினைத்த ஜஸ்டின் ட்ரூடோ அவர்களுக்கு அமைச்சரவையில் முக்கியத்துவம் அளித்தார். ஆனால் இந்தியாவில் காலிஸ்தான் தனி நாடு கேட்கும் காலிஸ்தானிகளுக்கு கனட அமைச்சரவையில் இடம் கொடுத்த நிலையில் அவர்கள் கனட அரசியலில் ஆதிக்கம் செலுத்த தொடங்கினர்.

தொடர்ந்து சீக்கியர்கள் ஆதரவுடன் 2021 தேர்தலில் ட்ரூடோ பெரு வெற்றி பெற்றார். இந்த நிலையில் தான் 2023 காலிஸ்தான் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் படுகொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போதிருந்து இந்தியா - கனடா உறவில் விரிசல் விழத் தொடங்கியது.
இந்த நிலையில் இந்திய மாணவர்களுக்கு விசா, காலிஸ்தான் ஆதரவு என இந்தியாவுக்கு எதிராக செயல்பட தொடங்கியதைத் தொடர்ந்து அவரது லிபரல் கட்சி நிர்வாகிகளை எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் என நெருக்கடி கொடுத்தனர். இந்த ஆண்டு அக்டோபரில் கனடாவில் பிரதமர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் லிபரல் கட்சியின் தலைவர் மற்றும் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்ததோடு, கடந்த சில நாட்களுக்கு முன்னர் பதவி விலகினார்.
இதை அடுத்து கனடாவில் ஆளும் கட்சியான லிபரல் கட்சியின் புதிய தலைவராக மார்க் கார்னி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் கனடாவின் பிரதமராகவும் அவர் பதவியேற்க உள்ளார். இந்த நிலையில் தான் ஜஸ்டின் காரணமாக இந்திய கனடா உறவு மோசமடைந்த நிலையில் அதனை மீண்டும் கட்டி எழுப்ப விரும்புவதாகவும், இந்தியாவுடன் கனடாவில் வர்த்தக உறவை மேம்படுத்த விரும்புவதாக தெரிவித்திருக்கிறார் மார்க்.
இதுதொடர்பாக பேசிய அவர்," இந்த சூழலில் கனடா என்ன செய்ய விரும்புகிறது என்றால், ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளுடனான எங்கள் வர்த்தக உறவைப் பன்முகப்படுத்துவதுதான். மேலும் இந்தியாவுடனான உறவை மீண்டும் கட்டியெழுப்ப வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவுடனான வணிக உறவை மேம்படுத்த வேண்டும். நான் பிரதமராக பதவியேற்கும் போது இந்தியவுடனான வர்த்தக உறவுகளை கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பை எதிர்நோக்கியுள்ளேன்" என கூறியுள்ளார்.
யார் இந்த மார்க் கார்னி?: தற்போது 59 வயதாகும் மார்க் கார்னி லிபரல் கட்சியின் புதிய தலைவராகவும் கனடாவின் 24 ஆவது பிரதமராகவும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். கனடா பொருளாதார நிதி சவால்களை எதிர்கொண்டிருக்கும் நிலையில் அவரது வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. காரணம் கனட வங்கியில் தலைவராகவும் அவர் பணியாற்றியிருக்கிறார். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் கனட வங்கியில் ஆளுநராகவும் 7 ஆண்டுகள் நிதி நிலைத்தன்மை வாரிய தலைவராகவும் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய சூழலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பரஸ்பர வரியை விதிப்பதாக கூறியிருக்கும் நிலையில் கனடாவின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியா உதவி செய்யும் எனவும் இரு தரப்பு உறவுகளை மேம்படுத்த முயற்சிகளுக்கு இந்தியா தொடங்கி நிற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் மார்க் கார்னி பதவியேற்ற பிறகு, குடியேற்றம், விசா விதிமுறைகள் உள்ளிட்டவை தொடர்பாக இந்தியா பேச்சுவார்த்தை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications