For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மெக்கா மசூதி விபத்தில் 2 இந்தியர்கள் பலி; 15 பேர் படுகாயம்; ஹெல்ப் லைன் எண்கள் அறிவிப்பு!

Google Oneindia Tamil News

மெக்கா: மெக்காவில் பெரிய மசூதி மீது கிரேன் முறிந்து விழுந்ததில் 107 பேர் பலியானோரில் 2 பேர் இந்தியர்கள் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் ஹஜ் புனித யாத்திரை சென்ற இஸ்லாமியர்களின் உறவினர்கள் அச்சத்திலும், சோகத்திலும் உள்ளனர். இந்த விபத்து குறித்த கூடுதல் தகவல்களை அறிந்து கொள்ள ஹெல்ப் லைன் எண்களையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

சவுதி அரேபியாவின் மெக்கா நகரில், பெரிய மசூதி மீது நேற்று இரவு கிரேன் விழுந்தது. இந்த சம்பவத்தில் 107 பேர் பலியானார்கள். 238 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

Mecca crane collapse. Including 9 indians 65 dead in Saudi Arabia

சவுதி நேரப்படி மாலை 5.45 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. அந்த பகுதியில் நல்ல மழை பெய்ததாகவும், இதனால் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களின் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்த விபத்தில் 2 இந்தியர்கள் பலியானதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்துடன் 15 இந்தியர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

ஹெல்ப் லைன் எண்கள்

இந்த விபத்து குறித்து அறிந்து கொள்வதற்கான ஹெல்ப் லைன் எண்களையும் வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

செளதி அரேபியாவில் உள்ள இந்திய அதிகாரிகளைத் தொடர்பு கொள்வதற்கான ஹெல்ப் லைன் எண்கள்:

00966125458000

00966125496000

ஹஜ் யாத்ரீகர்களுக்கான செளதி டோல் ப்ரீ எண்:

8002477786

English summary
Including 9 indians 65 people have died after a crane collapsed on the Grand Mosque in the Muslim holy city of Mecca.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X