"ரூ.40 கோடி.." உலக சாதனை படைத்த நெல்லூர் இன மாடு.. வாயை பிளந்த வியாபாரிகள்! அப்படி என்ன ஸ்பெஷல்?

Subscribe to Oneindia Tamil

பிரேசிலியா: நமது சொந்த நாட்டின் மாட்டு ரகங்களை நாம் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. ஆனால், வெளிநாடுகளில் நமது மாட்டு ரகங்களுக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கிறது. அப்படி தான் பிரேசில் நாட்டில் நமது நெல்லூர் இன மாடு ஒன்று சுமார் 40 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகிலேயே அதிக விலைக்கு விற்கப்பட்ட கால்நடை என்ற சாதனையை இந்த மாடு படைத்துள்ளது.

உலகெங்கும் மக்கள் அதிகம் பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்களில் ஒன்றாகப் பால் இருக்கிறது. இது பல லட்சம் கோடி மதிப்புடைய ஒரு மிகப் பெரிய துறையாக இருக்கிறது.

offbeat brazil nellore

ரூ.40 கோடி:

பால் அதிகளவில் உற்பத்தி செய்ய நாம் வெளிநாட்டு ரக மாடுகள் நோக்கிச் செல்லும் நிலையில், வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் நம்ம ஊர் மாடுகளை ஆர்வமாக வாங்கி வருகிறார்கள். அப்படி தான் பிரேசில் நாட்டில் இந்திய ரக பசு ஒன்று 4.9 மில்லியன் டாலருக்கு (ரூ.40 கோடி) ஏலம் போய் இருப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

பிரேசிலில் உள்ள மினாஸ் ஜெராஸ் நகரில் நடந்த இந்த ஏலத்தில் இந்திய ரக பசு ரூ.40 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகிலேயே அதிக விலைக்கு விற்கப்பட்ட கால்நடை என்ற கின்னஸ் சாதனையை இந்த மாடு படைத்துள்ளது. Viatina-19 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பசு தான் இப்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

இரண்டு மடங்கு எடை:

வழக்கமாக இந்த நெல்லூர் இன மாடுகள் 400 முதல் 500 கிலோ எடை கொண்டதாக இருக்கும். ஆனால், இந்த Viatina-19 மாடு சுமார் 1,101 கிலோ கொண்டதாக இருக்கிறது. அதாவது சராசரி நெல்லூர் இன மாட்டை விட இது இரண்டு மடங்கு அதிக எடை கொண்டதாக இருக்கிறது. அழகிய வெள்ளை ரோமங்கள், பளபளக்கும் தோல் கொண்ட இந்த நெல்லூர் மாட்டிற்கு 4.5 வயதாகிறது.

அதிக விலைக்கு விற்கப்பட்ட மாடு என்ற சாதனை மட்டுமின்றி, பசுக்களுக்கான மிஸ் சவுத் அமெரிக்கா அழகி போட்டியிலும் இது பட்டம் வென்றுள்ளது மற்றொரு சிறப்பாகும். இந்த மிஸ் சவுத் அமெரிக்கா போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பசுக்களும் போட்டியிட்டன. அவை அனைத்தையும் வீழ்த்தி இந்த பசு பட்டம் வென்றுள்ளது. இதன் அட்டகாசமான தசை அமைப்பும் அரிய மரபணு லைனும் அதன் வெற்றிக்குப் பிரதான காரணமாக இருக்கிறது.

ஆர்வம் காட்டுவது ஏன்:

நெல்லூர் இன மாடுகள் பொதுவாக வெப்பமான நிலையில் எளிதாக வளரும். மேலும், மற்ற இன மாடுகள் எளிதாக நோய்வாய்ப்படும். ஆனால், நெல்லூர் இன மாநாடுகளுக்கு நோய் எதிர்ப்புத் திறன் ரொம்பவே அதிகம். இதன் காரணமாகவே மக்கள் தற்போது இந்த ரக மாடுகளை வாங்கி வளர்க்க அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். மேலும், சர்வதேச அளவிலும் இந்த ரக மாடுகளுக்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக அங்குள்ள பிரபல கால்நடை மருத்துவர் லாரனி மார்டின்ஸ் கூறுகையில், "வயட்டினா -19 போல நாம் இன்னொரு பசுவைப் பார்ப்பது அரிது. இது கிட்டதட்ட பக்காவான ஒரு பசு. அது ஒரு முழுமையான மாடு.. உரிமையாளர் தேடும் அனைத்து குணாதிசயங்களையும் கொண்ட மாடாக இது இருக்கிறது" என்றார்.

பிரேசில் நாட்டில் தான் அதிகம்:

என்ன தான் இது இந்தியாவைச் சேர்ந்த ரகமாக இருந்தாலும் இப்போது பிரேசில் நாட்டில் தான் நெல்லூர் இன மாடுகள் அதிகம் வளர்க்கப்படுவதாக ஓக்லஹோமா ஸ்டேட் யுனிவர்சிட்டி தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அர்ஜென்டினா, பராகுவே, வெனிசுலா, மத்திய அமெரிக்கா, மெக்ஸிகோ, அமெரிக்கா எனப் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த ரக மாடுகளை வளர்க்க ஆர்வம் காட்டுகிறார்கள்.

பிரேசிலுக்குப் போனது எப்படி:

தற்போது பிரேசில் நாட்டில் வளர்க்கப்படும் பசுக்களில் குறைந்தது 80 சதவிகிதம் ஜெபு, அதாவது இந்தியாவைச் சேர்ந்த பசு ரகம் ஆகும். Viatina-19 மாட்டை நெல்லூர் இன மாடு என்றும் ஓங்கோல் இன மாடு என்றும் குறிப்பிடுகிறார்கள். இது முதலில் 1800களில் பிரேசிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.. ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில் இந்த மாடு முதலில் தோன்றி இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். பிரேசில் நாட்டில் இந்த மாடுகள் பெரும்பாலும் இறைச்சிக்காக வளர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+