For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இதோ இன்னொரு மர்மம்.. திடீரென வந்து மறையும் "மாய தூண்".. யார் செய்யும் வேலை இது.. அதிகாரிகள் ஷாக்

மாயமாகும் உலோகத்தூண் இன்று போலந்து நாட்டில் தென்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

வார்சா, போலந்து: ஏற்கனவே இந்த கொரோனா வைரஸ் எதனால், எப்படி வந்தது என்று தெரியாமலே உலகமே விழித்து கொண்டிருக்கும்போது, இன்னொரு மர்மம் கிளம்பி உள்ளது..., அதுதான் அந்த "உலோக தூண்"!.

கடந்த நவம்பர் 18-ம் தேதி, அமெரிக்காவில் உள்ள யூட்டாவின் பொது பாதுகாப்புத்துறை அதிகாரிகள் வன ஆடுகளின் கணக்கெடுப்பை ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்து கொண்டிருந்தனர்.

Metal Monolith vanishes the mystery continues in Poland also

அப்போது என்னவோ பிரகாசமான ஒரு பொருளை வானத்தில் இருந்து பார்த்தனர். அது என்னவாக இருக்கும் என்று அருகில் சென்றனர்.. அது 10-12 அடி உயரத்தில் தூண் போல இருந்ததாம்.. பாறைகள் சூழ்ந்த அந்த பாலைவனத்திற்கு நடுவில் ஒரு பெரிய முக்கோண வடிவில் உலோகத்தால் இருந்திருக்கிறது..

இந்த தூணை யார் கொண்டு வந்து அந்த பாலைவனத்தில் வைத்திருப்பார்கள்? என்று ஆராய்ந்தனர்.. ஒரு தடயமும் கிடைக்கவில்லை.. மேலும், அந்த பகுதியில் எந்த வண்டியும் வரவே முடியாதாம்.. அவ்வளவு கரடுமுரடு பாதை அது. அதனால், இது தொடர்பான போட்டோ, வீடியோக்கள் இணையத்தில் வைரலாயின.. அது என்னவாக இருக்கும் என்பதே அனைவரின் கேள்வியாக எழுந்தது..

ஆளாளுக்கு ஒரு கருத்து சொல்ல ஆரம்பித்தனர்.. ஒருவேளை அது ஏலியன்ஸ் வேலையாக இருக்குமோ? என்றனர்.. மேலும் சிலர் 1968-ல் வந்த ஒரு சினிமாவில் இந்த மாதிரிதான் ஒரு தூணை பார்த்தோம் என்றனர். இது என்ன, ஏதென்று ஆய்வு செய்து கொண்டிருக்கும்போதே அந்த தூண் அப்படியே மாயமாக மறைந்துவிட்டதாம்.. இதை பார்த்து இன்னமும் அதிர்ச்சி அடைந்துவிட்டனர் அதிகாரிகள்..

கொரோனாவுக்கு பிறகு.... வேலைக்கு சேருவதில் பெண்கள் முதலிடமாம்... ஆய்வில் தகவல்!கொரோனாவுக்கு பிறகு.... வேலைக்கு சேருவதில் பெண்கள் முதலிடமாம்... ஆய்வில் தகவல்!

அங்கிருந்த தூணை திடீரென காணவில்லையாம்..அப்படியானால், வேற்றுகிரக வாசிகள்தான் இதை வைத்து, மறுபடியும் கையோடு எடுத்து சென்றுவிட்டார்களா என்ற அடுத்த சந்தேகம் எழுந்தது. அந்த தூணில் ஏதேதோ கிறுக்கி வைக்கப்பட்டுள்ளதாம்.. இதற்கு பிறகு காணாமல் போன இந்த தூண், மறுபடியும் பிரிட்டன், ருமேனியா, நெதர்லாந்து நாடுகளில் திடீரென தென்பட்டதாம்.

ஆனால் மறுபடியும் காணாமல் போய் உள்ளது.. இந்நிலையில் தற்போது போலந்திலும் கண்டறியப்பட்டுள்ளதாம்.. வார்சாவிலுள்ள விஸ்டுலா நதிக்கோரையோரம் மணற்பரப்பில் இந்த தூண் இருக்கிறது.. காலையில் அந்த பீச்சில் வாக்கிங் சென்றோர் 10 அடி உயர தூணை பார்த்திருக்கிறார்கள்.. எப்படியும் இந்த தூணும் மாயமாகும் என்றாலும், யார் இதை வைக்கிறார்கள், எடுக்கிறார்கள்? எப்படி மறைகிறது? இது என்ன தூண்? என்று இதுவரை யாருக்குமே எதுவுமே புரிபடவில்லை.

English summary
Metal Monolith vanishes the mystery continues in Poland also
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X