குடும்பத் தகராறு.. மனைவியை பழிவாங்க 3 மகன்களை அடித்துக் கொன்ற தந்தை.. மெக்சிகோவில் கொடூரம்!
மெக்சிகோ: குடும்ப தகராறில் மனைவியை பழிவாங்குவதற்காக தனது மூன்று மகன்களை கொன்ற தந்தையை மெக்சிகோ போலீசார் கைது செய்துள்ளனர்.
'ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு' என தமிழில் ஒரு சொலவடை உண்டு. கோபத்தால் எதையும் சாதிக்க முடியாது என்பது இதற்கு பொருள். கோபம் எப்போதும் பேரழிவையே ஏற்படுத்தும்.

இதற்கு உதாரணமாகி இருக்கிறது மெக்சிகோ நாட்டில் நடைபெற்ற சம்பவம் ஒன்று. அந்நாட்டின் ஹிதல்கோ மாநிலத்தில் நடந்த இந்த சம்பவம் நெஞ்சை உறைய வைக்கும் வகையில் அமைந்துள்ளது.
ஹிதல்கோவில் வாழ்ந்து வரும் ஒரு தம்பதியிடையே கடுமையான சண்டை ஏற்பட்டிருக்கிறது. கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம் கொலை வரை சென்றுவிட்டது. மனைவியின் மீது கடும் கோபம் கொண்ட கணவன், அந்த பெண்ணை பழிவாங்குவதற்காக தனது மூன்று மகன்களை அடித்தே கொன்றுவிட்டார்.
மூன்று கொலைகளை செய்த அந்த நபர், சொனோரா மாநிலத்திற்கு தப்பி சென்றுவிட்டார். இதையடுத்து போலீசார் அவரை தேடி சென்று கைது செய்து சிறையில் அடைத்தனர். தன்னை மிகவும் மோசமாக பேசிய மனைவியை பழிவாங்குதற்காகவே மகன்களை அடித்து கொன்றதாக போலீசாரிடம் அந்த நபர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
கொலையான சிறுவர்களுக்கு முறையே 3,7 மற்றும் 8 வயதாகிறது. கணவன் மனைவி இடையே ஏற்பட்ட வாய்தகராறு சிறு பிள்ளைகளை கொலை செய்யும் அளவுக்கு சென்றது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications