மாயமான மலேசிய விமானத்தை கடலுக்கு அடியில் தேடும் பணி செப்டம்பரில் மீண்டும் துவங்கும்
கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானத்தை கடலுக்குள் அடியில் தேடும் பணி வரும் செப்டம்பர் மாதம் மீண்டும் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாம்பூரில் இருந்து 239 பேருடன் சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பிய மலேசியன் ஏர்னைல்ஸ் விமானம் எம்.ஹெச். 370 மாயமானது. விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டது என்றும், அதில் பயணம் செய்த அனைவரும் பலியாகிவிட்டனர் என்றும் மலேசிய அரசு அறிவித்தது.

இதையடுத்து தெற்கு இந்திய பெருங்கடலில் 26க்கும் மேற்பட்ட நாடுகள் சேர்ந்து தேடியும் விமானத்தின் ஒரு பாகம் கூட இதுவரை கிடைக்கவில்லை. இதற்கிடையே கடலுக்குள் அடியில் சென்று விமானத்தை தேட ஆளில்லா நீர்மூழ்கி கப்பலை பயன்படுத்தியும் பயனில்லை.
இந்நிலையில் கடலுக்கு அடியில் விமானத்தை தேடும் பணி வரும் செப்டம்பர் மாதம் முதல் மீண்டும் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மாயமான விமானத்தை தேடி வரும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த குழுவின் தலைவரான ஆங்கஸ் ஹூஸ்டன் உக்ரைனில் சுட்டுத் தள்ளப்பட்ட மலேசிய விமான விசாரணைக் குழுவின் சிறப்பு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்
ஆங்கஸ் உக்ரைனில் இருக்கும் நேரத்தில் மாயமான விமான தேடல் துணை ஒருங்கிணைப்பாளர் ஜுடித் ஜீல்கே தலைமையில் நடைபெறும். மாயமான மலேசிய விமானத்தை தொடர்ந்து இந்திய பெருங்கடலில் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications