மிஸ் வேர்ல்டுக்குப் போட்டி... முஸ்லிம் உலக அழகியாக பட்டம் பெற்றார் நைஜீரிய பெண்
ஜகர்தா: முஸ்லீம் பெண்களுக்கான உலக அழகிப் போட்டியில் நைஜீரியாவைச் சேர்ந்த பெண் உலக முஸ்லீமாவாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த ஆண்டுக்கான உலக அழகிப் போட்டி இந்தோனேசியாவின் ஜகர்தாவில் இருந்து பாலி தீவுக்கு மாற்றப்பட்டது. நீச்சல் உடை அணியவும் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்தப் போட்டிக்கு எதிராக முஸ்லீம் பெண்களுக்கான உலக அழகிப் போட்டி தலைநகர் ஜகர்த்தாவில் புதன்கிழமை நடந்தது.

500 அழகிகள் விண்ணப்பம்
உலகிலேயே அதிகம் முஸ்லிம்கள் வசிக்கும் நாடான இந்தோனேசியாவில் நடந்த இப்போட்டியில் உலக முழுவதும் உள்ள முஸ்லிம் நாடுகளில் இருந்து 500 அழகிகள் வந்து கலந்துகொண்டனர்.

இறுதியில் 20 அழகிகள்
இந்த போட்டியின் இறுதியில் 20 அழகிகள் தேர்வு செய்யபட்டனர். இஸ்லாம் மதக்கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாக இப்போட்டிகள் நடத்தப்பட்டன.

குரான் வாசிப்பது
குரான் வாசகங்களை படிப்பது, இஸ்லாமிய கதைகள் ஒப்புவித்தல், இஸ்லாமிய மத உடைகளை அணிவதில் கடைபிடிக்கப்படும் மரபுகள் உள்ளிட்டவை குறித்து இதில் கேள்விகள் கேட்கப்பட்டன.

நைஜீரியா அழகி
இந்தோனேசியா, புரூனே, நைஜீரியா, மலேசியா, ஈரான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அழகிகள் இறுதிச் சுற்றில் பங்கேற்றனர். இதில் நைஜீரியாவை சேர்ந்த ஒபாபியி ஆயிஷா அஜிபோலா என்ற 21 வயது பெண் 'உலக முஸ்லிமா 2013' என்ற இந்த பட்டத்தை வென்றார்.

2200 அமெரிக்க டாலர் பரிசு
ஆன்லைன் மூலம் தேர்வு செய்யப்பட்ட 500 பேர்களில் இருந்து நைஜீரியாவின் அஜிபோலா தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு 2200 அமெரிக்க டாலர் பரிசளிக்கப்படுகிறது. மேலும் அவர் மெக்கா மற்றும் இந்தியா சென்று வர டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கும் எதிர்ப்பு
இந்த அழகிப் போட்டியை நடத்தக்கூடாது என்று முஸ்லிம் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் எனினும் போட்டியை நடத்தி அழகிப் போட்டியை தேர்வு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications