காபூல் ஏர்போர்ட் நோக்கி வந்த தீவிரவாதிகள் ராக்கெட் : வழிமறித்து தாக்கிய "டிபன்ஸ் சிஸ்டம்" : பரபரப்பு
காபூல்: காபூல் விமான நிலையம் நோக்கி வந்த தீவிரவாதிகளின் ராக்கெட்டுகளை விமான நிலையத்தில் இருந்த ஏவுகணை மறிப்பு டிபன்ஸ் சிஸ்டம் தாக்கி அழித்துள்ளது. இதனால் மாபெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டுள்ளது.
Recommended Video
காபூல் விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் இருந்தே அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. அடுத்தடுத்து வானத்தில் பறக்கும் ராக்கெட்டுகள், டிரோன் தாக்குதல்கள், குண்டுவெடிப்புகளால் ஆப்கானிஸ்தான் மக்கள் அச்சத்திற்கும் குழப்பத்திற்கும் உள்ளாகி இருக்கிறார்கள். காபூலில் கடந்த வியாழக்கிழமை நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் மொத்தம் 170 பேர் பலியானார்கள்.
இந்த தாக்குதலில் அமெரிக்க படையினர் 13 பேர் பலியானார்கள். இந்த நிலையில்தான் தற்போது காபூலில் மாறி மாறி ராக்கெட் தாக்குதலும், டிரோன் தாக்குதலும் நடக்கிறது. யார் யார் மீது தாக்குதல் நடத்துகிறார்கள் என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

தாக்குதல்
* இஸ்லாமிக் ஸ்டேட் கோரஷான் இந்த காபூல் விமான நிலைய தாக்குதலை நடத்தியதாக பொறுப்பேற்றுள்ளது.
* இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த வெள்ளிக்கிழமையும், நேற்றும், இன்று அதிகாலையும் அமெரிக்க படைகள் இஸ்லாமிக் ஸ்டேட் கோரஷானுக்கு எதிராக டிரோன் தாக்குதல் நடத்தியது. வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் இஸ்லாமிக் ஸ்டேட் கோரஷானின் முக்கியமான தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டதாக செய்தி வெளியானது.
* நேற்றும், இன்றும் நடத்தப்பட்ட அமெரிக்காவின் டிரோன் தாக்குதலில் பல்வேறு தீவிரவாதிகளின் குண்டுகள் பொறுத்தப்பட்ட கார்கள் தாக்கி அழிக்கப்பட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது. இந்த தாக்குதல்கள் எல்லாம் காபூல் விமான நிலையம் அருகே நடத்தப்பட்ட தாக்குதல்கள் ஆகும்.

மீண்டும்
* அமெரிக்காவின் இந்த டிரோன் தாக்குல் மூலம் மிகப்பெரிய குண்டுவெடிப்பு தாக்குதல் தவிர்க்கப்பட்டதாக அமெரிக்காவின் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
* இப்படிப்பட்ட நிலையில்தான் இன்று அதிகாலை காபூல் விமான நிலையம் நோக்கி 5 ராக்கெட்டுகள் சீறி வந்துள்ளது. விமான நிலையத்தை தாக்கும் வகையில் தீவிரவாதிகளின் இந்த ராக்கெட் வந்துள்ளது.
* இந்த ராக்கெட்டுகளை விமான நிலையத்தில் பொருத்தப்பட்டு இருந்த அமெரிக்காவின் ஏவுகணை மறிப்பு டிபன்ஸ் சிஸ்டம் தாக்கி அழித்துள்ளது. இதனால் மாபெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டுள்ளது.

குழப்பம்
* இந்த தாக்குதலை நடத்தியது தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்பட்டாலும் யார் இந்த தாக்குதலை நடத்தியது என்று உறுதியாக அறிவிக்கப்படவில்லை. இஸ்லாமிக் ஸ்டேட் கோரஷான் இதற்கு பின்னணியில் இருக்கும் என்று அஞ்சப்படுகிறது .
*அதேபோல் எல்லா ராக்கெட்டும் தடுக்கப்பட்டு அழிக்கப்பட்டதா என்றும் அமெரிக்க படைகள் உறுதி செய்யவில்லை.
* மேலும் இந்த ராக்கெட் தாக்குதலில் அமெரிக்க படையினர், பொது மக்கள் யாராவது பலியானார்களா என்றும் அறிவிக்கப்படவில்லை.

பரபரப்பு
*ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் நாளை வெளியேற உள்ள நிலையில்தான் இந்த ராக்கெட் தாக்குதல் அமெரிக்க படைகளை குறி வைத்து நடத்தப்பட்டுள்ளது.
*இதையடுத்து அமெரிக்க படைகள் கடைசி கட்டமாக நடக்க வேண்டிய மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. நாளை அமெரிக்காவின் படைகள் அனைத்தும் மொத்தமாக காபூலை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
நாட்டில் 21 இடங்களுக்கு குறி.. பதம் பார்த்த ஈரான் IRGC ராணுவ படை.. அலறிய அமெரிக்கா! -
B1/B2 Visa: காசு கொடுத்த 10 நாளில் அமெரிக்கா செல்ல விசா.. ப்ரீமியம் சேவையாம்! -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை!












Click it and Unblock the Notifications