அமெரிக்க ஆற்றில் மூழ்கிப்போன இந்திய குடும்பம்: 12 வயது சிறுவனின் உடல் கண்டெடுப்பு
Recommended Video

கலிபோர்னியா: அமெரிக்காவில் மாயமான குடும்பத்தை சேர்ந்த 12 வயது சிறுவனின் உடல் கலிபோர்னியாவில் உள்ள ஆறு ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான்டா கிளாரிடாவில் வசித்து வந்த சந்தீப் தொட்டப்பிள்ளி(41), அவரின் மனைவி சவுமியா(38), மகள் சாச்சி(9), மகன் சித்தாந்த்(12) ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் ஹோண்டா பைலட் வாகனத்தில் ரெட்வுட் கோஸ்ட் நெடுஞ்சாலையில் சென்றபோது மாயமாகினர்.

அதில் இருந்து அவர்களை போலீசார் தேடிய நிலையில் தற்போது தான் அவர்களின் உடல்கள் கிடைத்துள்ளது. ஈல் ஆற்றில் மூழ்கிக் கிடந்த காருக்குள் சந்தீப், சாச்சி ஆகியோர் இறந்து கிடந்தது ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. முன்னதாக வெள்ளிக்கிழமை ஈல் ஆற்றில் இருந்து எடுக்கப்பட்ட பெண்ணின் உடல் சவுமியாவுடையது என்று அடையாளம் காணப்பட்டது.
ஆனால் சித்தாந்தின் உடல் மட்டும் கிடைக்கவில்லை. இந்நிலையில் சந்தீப் உள்ளிட்டோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் இருந்து 6 மைல் தொலைவில் உள்ள ஆற்றில் இருந்து சிந்தாந்தின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தீப் குடும்பத்தாரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போர்ட்லேண்ட், ஓரிகன் ஆகிய இடங்களுக்கு காரில் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பியபோது தான் அவர்கள் மாயமாகினர்.
சான் ஹோஸே பகுதியில் உள்ள உறவினரின் வீட்டிற்கு கூறிய நேரத்தில் வராததால் அவர்களை காணவில்லை என்று போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
-
தோற்றது ஈரான் இல்லை! டிரம்ப் தான்.. ரூ.28 லட்சம் கோடியை தாரை வார்க்கும் அமெரிக்கா.. பின்னணி -
இந்தியாவுக்கு சிக்கல் தொடரும்.. ஹார்முஸ் திறக்கப்பட்டாலும் கூட எல்லா பிரச்சனையும் உடனே தீராது! -
இனி ஹார்முஸ் முழுக்க ஈரானுக்கு தான்.. டிரம்பே சொல்லிட்டாராம்.. குத்தாட்டம் போடும் ஈரான் மக்கள்.. ஏன்? -
போர் முடிந்தது.. சுவிட்ச் போட்டது போல் பெட்ரோல் விலை நாளைக்கே குறையுமா..? வாய்ப்பில்ல ராஜா, ஏன்? -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி -
நெதன்யாகு சாயம் வெளுத்தது.. ஈரான் நினைத்தால் இஸ்ரேல் 2 மணிநேரத்தில் காலி.. டிரம்ப் பேச்சால் ஷாக்! -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
ஈரான் போரில் யாருக்கு வெற்றி..? குண்டை தூக்கிப்போட்ட இஸ்ரேல்..! குழப்பத்தில் டிரம்ப்! -
ஈரானுடன் ராசியான டிரம்ப்.. ஏன் இந்த திடீர் மனமாற்றம்..? அமெரிக்காவில் வெடித்த பூகம்பம்! இதுதான் உண்மை! -
அடுத்த 60 நாட்கள் ரொம்ப முக்கியம்.. அமெரிக்கா ஈரான் போரில் மாற்றம்! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
இஸ்ரேலை கழற்றிவிட நேரம் வந்தாச்சு.. டிரம்ப் எடுக்கப்போகும் முக்கிய முடிவு.. நெதன்யாகு ஷாக்!












Click it and Unblock the Notifications