பணம்னா பொணமே வாயைத் திறக்கும்... இந்த சீனத்துக் கோமாக்காரர் எம்மாத்திரம்?
பெய்ஜிங்: கோமாவில் இருந்த நபரை சீன மருத்துவர்கள் வித்தியாசமான முறையில் சிகிச்சை அளித்து பிழைக்க வைத்திருக்கிறார்கள்.
பணம் என்ற தாளிற்கு கிடைக்கும் மதிப்பு, பெரும்பாலான இடங்களில் மக்களுக்குக் கூட கிடைப்பதில்லை. அதனால் தான் நம் முன்னோர்கள் பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும் எனச் சொல்லி வைத்தார்கள் போலும்.

பணத்தைக் காட்டினால் பிணமே வாயைத் திறக்கும் என்றால் நோயாளிகள் மட்டும் விதிவிலக்கா. சீனாவில் கோமாவில் போராடிய நோயாளி ஒருவரை பணத்தின் உதவியால் மருத்துவர்கள் பிழைக்க வைத்துள்ளனர். அதிக பணம் செலவழித்து பிழைக்க வைத்திருப்பார்கள் என நீங்கள் நினைத்தால் அது தவறு. வெறும் 100 யென் நோட்டால் கோமாவிலிருந்து மீட்டுள்ளனர். குழப்பமாக இருக்கிறதா...? மேற்கொண்டு படியுங்கள்.
சீனாவைச் சேர்ந்த ஜியோ லீ என்ற 30 வயதுக்காரர், பிசினசை மேம்படுத்துவது தொடர்பாக ஒருவார காலமாக தூங்காமல் இணையத்திலேயே உலாவிக் கொண்டிருந்துள்ளார். இதனால், கடந்த 2013ம் ஆண்டு திடீரென மயங்கி விழுந்து கோமா நிலைக்குப் போனார்.
ஒராண்டிற்கும் மேலாக மருத்துவர்கள் எவ்வளவோ சிகிச்சை அளித்துப் பார்த்தும் ஜியோவின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை. எனவே, ஜியோ மிகவும் நேசிக்கும் பொருள் குறித்து அவரது குடும்பத்தினரிடம் மருத்துவர்கள் விசாரித்துள்ளனர். அப்போது அவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் சொன்ன ஒரே வார்த்தை ‘பணம்'.
எனவே, பணத்தைக் கொண்டு ஜியோவிற்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர். அதன்படி, 100 யென் நோட்டை ஜியோவின் மூக்கிற்கு அருகில் கொண்டு சென்று அதன் வாசத்தை அவரை நுகரச் செய்துள்ளனர். மேலும், அந்நோட்டை கசக்கி அதன் சத்தத்தையும் ஜியோவைக் கேட்கச் செய்துள்ளனர்.
ஆச்சர்யம் ஆனால் உண்மை, ஜியோவில் உடலில் அசைவு தெரிந்துள்ளது. கைகள் மேலெழும்பி ரூபாய் நோட்டைப் பறிக்க முயற்சித்துள்ளது. கண் இமைகளிலும் லேசான அசைவு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஜியோவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கூறுகையில், ‘எனது 30 ஆண்டுகால மருத்துவ சேவையில் இப்படி ஒரு அதிசயத்தை இப்போது தான் முதன்முறையாக பார்க்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.
ஜியோ முழுவதுமாக கோமாவில் இருந்து மீண்டு வராவிட்டாலும், தொடர்ந்து அவருக்கு ‘மணி'தெரபி அளிக்கப் பட்டு வருகிறது. அவரது உடல்நிலை மெல்ல மெல்ல முன்னேறி வருவதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications