கேமராவை கொடுப்பா.. லெட் அஸ் டேக் ஏ செல்பி.. இதுக்குப் பேர்தான் குரங்குச் சேட்டையோ!
பாலி: இந்தோனேஷியாவில் குரங்குகள் காட்டில் ஒரு குடும்பத்தினர் செல்பி எடுத்தபோது அங்கு வந்த குரங்கு அந்த கேமராவுக்கு போஸ் கொடுத்து செல்பி எடுத்துக் கொண்ட சம்பவம் சிரிப்பை வரவழைக்கிறது.
ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் ஜூடி ஹிக்ஸ். இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு கோடை விடுமுறைக்காக இந்தோனேஷியாவில் உள்ள பாலிக்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.
அதன்படி கணவர் சைமன், மூன்று குழந்தைகள் எலிஜா, ஜிம்மி, கேலீக் ஆகியோருடன் உபுத் குரங்குகள் காட்டுக்கு சென்றனர். அங்கு பெரும்பாலான நேரம் காட்டிலேயே இருந்ததால் ஹிக்ஸ் அவ்வப்போது போட்டோக்களை எடுத்துக் கொண்டிருந்தார்.

சுற்றுலா
இந்த நிலையில் 5 பேரும் சேர்ந்து போட்டோ எடுக்க விரும்பினர். உடனே இவர்கள் சுற்றுலா வழிகாட்டியிடம் தங்களை போட்டோ எடுக்குமாறு கூறினர். அப்போது அவரும் இவர்கள் ஐவரையும் போட்டோ எடுத்தார்.

குரங்கு
ஆனால் இரு போட்டோக்களிலும் ஒரு குரங்கு ஒன்று போஸ் கொடுத்துள்ளது. ஒரு போட்டோவில் தனது நடுவிரலை காட்டியபடி உள்ளது. இன்னொரு போட்டோவிலும் கெத்தாக போஸ் கொடுத்துள்ளது.

குரங்குடன் குடும்பத்தினர்
அழகான குடும்ப படம் எடுக்கும் போது குறுக்கே குரங்கு வந்த போதிலும் அக்குடும்பத்தினர் யாரும் பதறாமல் சிரித்தபடியே போஸ் கொடுத்துள்ளனர். இதுகுறித்து ஹிக்ஸ் கூறுகையில் ஒரு வாரமாக நாங்கள் பாலியில் தங்கியிருந்தோம். எங்கள் சுற்றுலாவின் ஒரு பகுதியாக குரங்குகள் காட்டுக்கு சென்றிருந்தோம்.
|
குரங்கு
அப்போது எங்களை போட்டோ எடுக்குமாறு சுற்றுலா வழிகாட்டியிடம் கேட்டுக் கொண்டோம். அப்போது கேமரா முன்பு ஒரு குரங்கு வந்தது. பின்னர் தனது கையில் இருந்த கடலையை குரங்குக்கு வழிகாட்டி கொடுத்தார். இது எங்களுக்கு உற்சாகமான அனுபவமாக இருந்தது என்றார் ஹிக்ஸ்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications