காபி ஷாப்பில் குழந்தைக்கு பால் கொடுத்த பெண்ணுக்கு விபச்சாரி பட்டம்
லண்டன்: பொது இடத்தில் குழந்தைக்கு பால் கொடுத்ததற்காக விபச்சாரி என்ற ஏச்சுக்கு ஆளாகியுள்ளார் லண்டன் பெண்மணி.
லண்டனின் கென்ட் பகுதியை சேர்ந்த 27 வயது பெண்மணியான ரியா ஹோலே, தனது தோழியுடன், தெற்கு லண்டனிலுள்ள கோஸ்டா காபி ஷாப்புக்கு சென்றுள்ளார். இருவருமே தங்களது பச்சிளம் குழந்தைகளை கையில் வைத்திருந்தனர். அப்போது ரியாவின் 11 மாத கைக்குழந்தை ஆர்தர்தூக்கத்தில் இருந்து விழித்து பசியால் அழுதுள்ளான். இதையடுத்து ரியாவும் தனது மகனுக்கு தாய்ப்பால் கொடுத்துள்ளார்.
இதை பக்கத்து டேபிளில் அமர்ந்திருந்த ஒரு ஜோடி, பார்த்துக்கொண்டிருந்தது. அவர்கள் இருவரும் திடீரென ரியாவை திட்டத்தொடங்கிவிட்டனர். "உனக்கு அறிவில்லை, பொது இடத்தில் பால் கொடுக்கிறாயே, இதெல்லாம் தப்பு என்று தெரியாதா விபச்சாரி" என்று கூறியுள்ளனர். விபச்சாரி என்பதற்கு தமிழில் ஒரு கெட்ட வார்த்தை உள்ளதே, அந்த வார்த்தையை பயன்படுத்தி அவ்வாறு கூறியுள்ளனர் அந்த இரக்கமற்ற ஜோடி.
இதைக்கேட்டதும், ரியாவுக்கு அழுகை வந்துவிட்டது, அழுது கொண்டே அங்கிருந்து விரைந்து வெளியேறிவிட்டார். இதுகுறித்து அப்பெண் கூறுகையில், "குறிப்பிட்ட அந்த காபி ஷாப்பில் ஏற்கனவே பலரும் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதை பார்த்துள்ளேன். எனவே யாரும் தடை சொல்லமாட்டார்கள் என்றுதான் நானும் அவ்வாறு செய்தேன்" என்றார். இதனிடையே ரியா அழுது கொண்டு வெளியேறியதை பார்த்த காபி ஷாப் ஊழியர்கள், இதற்கு காரணமான ஜோடியை கடையைவிட்டு வெளியேறுமாறு கூறியுள்ளனர்.
இங்கிலாந்து நாட்டின், 2010ம் ஆண்டு சமத்துவ சட்டப்படி, பொது இடத்தில் குழந்தைக்கு பால் கொடுக்கும் ஒரு பெண்ணை அங்கிருந்து கிளம்பி செல்லுமாறு கூறுவது தவறாகும்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications