வெடித்து சிதறிய இரட்டை எரிமலை.. 18 கிமீ உயரத்திற்கு பறந்த கரும்புகை.. அச்சத்தில் இந்தோனேசிய மக்கள்
ஜகார்த்தா: இந்தோனேசியாவின் லெவோடோபி லக்கி-லக்கி எரிமலை இன்று திங்கள்கிழமை திடீரென வெடித்துச் சிதறியிருக்கிறது. இதனால் சுமார் 18 கிலோமீட்டர் உயரம் வரை கரும்புகை பரவியுள்ளது. மேலும், அருகிலுள்ள கிராமங்கள் சாம்பலால் மூடப்பட்டதால் ஆபத்தான நிலை உருவாகியுள்ளது. இதனால் பொதுமக்களும் கூட மாஸ்க் அணிந்தே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
தென்கிழக்கு நாடான இந்தோனேசியா அடிக்கடி நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்புகளைச் சந்திக்கும் நாடாக இருக்கிறது. அங்குள்ள லெவோடோபி லக்கி-லக்கி எரிமலை (Mount Lewotobi Laki-Laki) இன்று திங்கள்கிழமை காலை திடீரென வெடித்துச் சிதறியிருக்கிறது. இதனால் சுமார் 18 கிலோமீட்டர் உயரம் வரை கரும்புகை பரவியுள்ளது. மேலும், அருகிலுள்ள கிராமங்கள் சாம்பலால் மூடப்பட்டு ஆபத்தான நிலை உருவாகியுள்ளது.

இந்தோனேசியா எரிமலை வெடிப்பு
2010-ல் ஏற்பட்ட மெராபி மலையின் வெடிப்புக்குப் பிறகு, இந்தோனேசியாவில் ஏற்பட்ட மிகப் பெரிய வெடிப்புகளில் இதுவும் ஒன்றாகும். இந்த வெடிப்பின் காரணமாக குவாண்டாஸ், ஜெட்ஸ்டார் மற்றும் விர்ஜின் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல விமான நிறுவனங்கள் பாலிக்கு தங்கள் விமானச் சேவையை ரத்து செய்துள்ளன.
கிழக்கு நுசா டெங்காரா மாகாணத்தில் உள்ள இந்த இரட்டை எரிமலை சிகரத்தைச் சுற்றிலும் கடந்த சில மாதங்களாகவே நில அதிர்வு செயல்பாடுகள் அதிகரித்தன. தொடர்ச்சியான சிறு சிறு வெடிப்புகளும் இருந்ததால் கடந்த ஜூன் முதலே ஹை அலர்ட் மோடில் தான் அதிகாரிகள் இருந்தனர். இந்தச் சூழலில் தான் இப்போது அந்த எரிமலை முழுமையாக வெடித்து சிதறியிருக்கிறது.
பாதுகாப்பு மண்டலம்
இது தொடர்பாகப் புவியியல் ஆய்வாளர் முகமது வாஃபித் கூறுகையில், "எரிமலை வெடிப்பின் காரணமாக எரிமலை குழம்பு, பாறைகள் மற்றும் எரிவாயு மேகங்கள் 5 கிலோமீட்டர் தூரம் வரை சரிவுகளில் பரவியது. மேலும், எரிமலை குழம்பு நிரம்பி வழிவது ட்ரோன் காட்சிகளில் தெளிவாகத் தெரிகிறது" என்றார்,
இந்த வெடிப்பு காரணமாக லெவோடோபி லக்கி-லக்கி மலையைச் சுற்றியுள்ள பாதுகாப்பு வளையம் 7 கிலோமீட்டர் சுற்றளவுக்கு விரிவாக்கப்பட்டுள்ளது. மேலும் கிராம மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் எரிமலையிலிருந்து விலகி இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். எரிமலை வெடிப்பின் வீரியம் மிக மோசமாக இருப்பதால் மோசமான பாதிப்புகள் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.
வெடித்துச் சிதறும் எரிமலை
இதற்கு முன்பு ஜூன் 17ம் தேதி எரிமலை 11 கிலோமீட்டர் தூரம் வரை சாம்பலைக் கக்கியது. இதனால் அப்போதே பல ஆயிரம் பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். அதன் பிறகு, எரிமலை வெடிப்புகள் கணிசமாக அதிகரித்தன.
தொடர்ச்சியான எரிமலை வெடிப்புகள் காரணமாகக் கடந்த 2024ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே இந்தத் தீவின் பிரான்ஸ் சேடா விமான நிலையம் மூடப்பட்டது. மறுபுறம், பாலி பகுதியில் உள்ள சர்வதேச விமான நிலையம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இருப்பினும் சாம்பல் காரணமாக விமானங்களுக்கு ஏற்படும் ஆபத்துகளை விமான நிறுவனங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.
அதிகாரிகள் அறிவுறுத்தல்
1,584 மீட்டர் உயரத்தில் உள்ள இரட்டை எரிமலையைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களிலும் சாம்பல் சூழ்ந்துள்ளது. இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் மாஸ்க் அணியவும், முடிந்தவரை வீட்டிற்குள்ளேயே இருக்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
நிலநடுக்கம் அதிகமாக ஏற்படும் "ரிங் ஆஃப் ஃபயர்" பகுதியில் இந்தோனேசியா அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் மட்டும் 120 ஆக்டிவ் எரிமலைகள் உள்ளன. இதன் காரணமாக எரிமலை வெடிப்பு அபாயம் உள்ள நாடுகளில் ஒன்றாக இது உள்ளது. 28 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தோனேசியா அடிக்கடி பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகளால் பாதிக்கப்படுகிறது. இதனால் உயிரிழப்புகளும் அவ்வப்போது ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications