மிஸ்டர் பிரைம் மினிஸ்டர்.. இம்ரான்கானை கோர்டில் ஏற்றி..பாக். உச்ச நீதிமன்றம் எழுப்பிய ஆவேச கேள்விகள்
இஸ்லாமாபாத் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் தடையை நீக்கிய 'தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான்' அமைப்புதான் பெஷாவரில் உள்ள ராணுவ பள்ளியின் மீது 2014 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பள்ளி குழந்தைகள் ஏராளமானோர் உள்பட 147 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணையில் பிரதமர் இம்ரான் கானை நேரில் ஆஜராக உத்தரவிட்ட பாகிஸ்தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குல்சார் அகமது "நீங்கள் ஆட்சியில் இருக்கிறீர்கள். அரசாங்கமும் உங்களுடையது. நீங்கள் என்ன செய்தீர்கள்? நீங்கள் குற்றவாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது ஏன்" என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.
பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள ராணுவ பள்ளி மீது கடந்த 2014ம் ஆண்டு தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற அமைப்பு தாக்குதல் நடத்தியது.

மனித தன்மையற்ற செயல்
குழந்தைகள் என்று பாராமல் மனித தன்மையற்ற தீவிரவாதிகள் சரமாரிய துப்பாக்கியால் சுட்டத்தில் 132 குழந்தைகள் கொல்லப்பட்டனர். ஆசிரியர்கள், ஊழியர்கள் என 147 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து தாமதமாகவே தகவல் அறிந்து அங்கு வந்த பாகிஸ்தான் ராணுவத்தினர். தீவிரவாதிகள் அனைவரையும் சுட்டுக்கொன்றனர்.

தடையை விலக்கினார்
இந்த வழக்கை விசாரித்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 20ம் தேதி தீர்ப்பை வழங்கியது. ஆனால் இந்த தீர்ப்பின் மீது பாகிஸ்தான் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேநேரம் பயங்கரவாத தாக்குதலை நடத்திய 'தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான்' அமைப்பின் மீதான் தடையை நீக்கியதுடன், அந்த அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

நீதிபதிகள் கடும் அதிருப்தி
இதனால் கடும் கோபம் அடைந்த உச்ச நீதிமன்றம் பிரதமர் இம்ரான்கான் கோர்டில் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டது. அதன்படி பிரதமர் இம்ரான் கான் இந்த வழக்கில் நேற்று காலை 10 மணிக்கு ஆஜராகி விளக்கம் அளித்திருக்க வேண்டும். ஆனால் இரண்டு மணி நேரம் தாமதமாக 12 மணிக்குதான் நேரில் ஆஜரானார். இதற்கு நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

பாதுகாப்பு அமைப்பு
இந்நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி குல்சார் அகமது தலைமையிலான அமர்வு முன்பு இம்ரான்கான் ஆஜரான போது நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியது. ராணுவ பள்ளி மீதான தாக்குதலில் குழந்தைகளை பறிகொடுத்த பெற்றார் அரசிடம் நஷ்டஈடு கேட்டவில்லை. நீதி கேட்கிறார்கள். குறிப்பிட்ட நாளில் பாதுகாப்பு அமைப்பு எங்கே போனது என்று தான் கேட்கிறார்கள்? "மீண்டும் ஒருமுறை சரணடையப் போகிறோமா?" என்று நீதிபதிகள் கேட்டனர்.

என்ன செய்தீர்கள்
இதற்கு பிரதமர் இம்ரான் கான், இச்சம்பவம் தொடர்பாக உயர்மடட் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று பதில் அளித்தார். இதற்கு நீதிபதிகள், 'மிஸ்டர் பிரைம் மினிஸ்டர்.. நாங்கள் ஏறகனவே விசாரணை குழு அமைத்துவிட்டோம். சம்பவம் நடந்து 7 ஆண்டுகள் முடிந்தும் அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? அக்டோபர் 20ம் தேதி நாங்கள் பிறப்பித்த உத்தரவில் இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளோம்.

பதில் சொல்லுங்கள்
பாகிஸ்தான் சிறிய நாடு கிடையாது, உலகின் 6வது பெரிய ராணுவ அமைப்பை கொண்டது. இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரியவந்துள்ளது. அது ஏன் என்று பிரதமராகிய நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும் என்று ஆவேசமாக நீதிபதிகள் கூறினர்.

உளவுத்துறை என்ன செய்தது
அப்போது அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல், தவறை ஏற்றுக்கொண்டார். உயர் அதிகாரிகளுக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்ய முடியாது என்று அட்டர்னி ஜெனரல் கூறினார். அதற்கு தலைமை நீதிபதி "தங்கள் குடிமக்களைப் பாதுகாக்கும் விஷயத்தில் உளவுத்துறை [ஏஜென்சிகள்] எங்கே போயின? முன்னாள் ராணுவத் தளபதி மற்றும் பிறருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதா?" என்று கேட்டார். விசாரணை அறிக்கை இல்லை என்று அட்டர்னி ஜெனரல் பதிலளித்தார்.

தலைமை நீதிபதி ஆவேசம்
அப்போது தலைமை நீதிபதி கூறும் போது முன்னாள் இராணுவத் தளபதி மற்றும் இன்டர் சர்வீசஸ் இன்டலிஜென்ஸின் முன்னாள் டைரக்டர் ஜெனரல் தொடர்பான புகார்களை கண்டுபிடியுங்கள். நாட்டில் இவ்வளவு பெரிய புலனாய்வு அமைப்பு உள்ளது. அதற்கு பல கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. உலகின் தலைசிறந்த புலனாய்வு அமைப்பு நாம் தான் என்ற கூற்றும் உள்ளது. உளவுத்துறைக்கு இவ்வளவு செலவழிக்கப்படுகிறது, ஆனால் முடிவுகள் பூஜ்ஜியமாக உள்ளன. என்றார்.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications