For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நியூயார்க் மருத்துவமனையில் துப்பாக்கிச்சூடு - நோயாளியை கொன்று விட்டு டாக்டர் தற்கொலை

அமெரிக்காவின் நியூயார்க் மருத்துவமனையில் டாக்டர் ஒருவர் நோயாளியை சுட்டுக்கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள பிரோன்க்ஸ் லெபானான் மருத்துவமனையில் அதிகாலை 2.50 மணிக்கு துப்பாக்கியுடன் நுழைந்த மர்மநபர் ஒருவர் அங்கிருந்த நோயாளிகளை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டார். இந்த சம்பவத்தில் பெண் நோயாளி ஒருவர் மரணமடைந்தார். 6 பேர் படுகாயமடைந்தார்.

துப்பாக்கிச்சூடு குறித்து தகவலறிந்த நகர போலீசார் மருத்துவமனையை சுற்றிவளைத்தனர். இதனையடுத்து, சிறிது நேரத்திற்கு உள்ளிருந்து சப்தம் எதும் கேட்காததால் சந்தேகமடைந்த போலீசார், உள்ளே அதிரடியாக புகுந்தனர். அப்போது, தாக்குதலில் ஈடுபட்ட நபர் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக் கொண்டு அங்கு சடலமாகக் கிடந்துள்ளார்.

Multiple people shot at New York hospital

மருத்துவமனைக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்திய நபரின் பெயர் ஹென்ரி பெல்லோ என்பதாகும். இவர் மருத்துவமனையின் முன்னாள் ஊழியர் என்பது விசாரணையில் தெரியவந்தது.

டாக்டர் ஹென்ரி பெல்லோ நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அங்கு ஒருவர் உயிரிழந்தார். மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர்.

டாக்டர் ஹென்ரி திடீரென துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் அந்த மருத்துவமனையில் முன்னாள் ஊழியர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பணியிடத்தில் நடந்த பிரச்சினை தொடர்பாக இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தீவிரவாத தாக்குதல் சம்பவம் கிடையாது என்றும் டுவிட்டரில் நியூயார்க் நகர போலீசார் பதிவிட்டுள்ளனர்.

English summary
Multiple people have been shot at the Bronx-Lebanon Hospital in New York city, the US police say.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X