ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டு சிறை.. இதுவரை மொத்தம் 33 ஆண்டுகள்.. பழிவாங்கும் மியான்மர் ராணுவம்
நய்பிடா: மியான்மர் நாட்டு தலைவர் ஆங் சான் சூகிக்கு 3 ஊழல் வழக்குகளில் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அவருக்கு 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. ஐ.நா. சபை இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு, ஆங் சான் சூகியை விடுவிக்குமாறும் அறிவுறுத்தியும் மியான்மர் ராணுவம் அதை கண்டுகொள்ளவில்லை.
ஆங் சான் சூகிக்கு எதிராக மியான்மர் ராணுவம் பதிவு செய்த பல வழக்குகள் இன்னும் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மக்களாட்சியை கவிழ்த்த ராணுவம்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகள் போராடியவர் ஆங் சான் சூகி (76). இதற்காக, அமைதிக்கான நோபல் பரிசும் இவருக்கு கிடைத்துள்ளது. இதனிடையே, கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில், ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி போட்டியிட்டு ஆட்சியைப் பிடித்தது. நீண்ட வருடங்களுக்கு பிறகு மியான்மரில் மக்களாட்சி மலர்ந்ததை மியான்மர் மக்கள் கொண்டாடி தீர்த்தனர். ஆனால், தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு ராணுவம் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றியது. இதன் தொடர்ச்சியாக, ஆங் சான் சூகி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

அடுக்கடுக்கான வழக்கு
ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியைத் தூண்டுதல், கரோனா விதிகளை மீறியது, அலுவல் ரீதியான சட்டங்களை மீறுதல், தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட்டது, பல ஊழல் வழக்குகள் என ஆங் சான் சூகி மீது 11 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வழக்குகள் தொடரப்பட்டன. இதுதொடர்பான விசாரணை, மியான்மர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியை தூண்டியது, கரோனா விதிகளை மீறியது ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளில் ஆங் சான் சூகிக்கு தொடர்ச்சியாக சிறைத்தண்டனைகள் விதிக்கப்பட்டன. அதன்படி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை அவருக்கு 26 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

ஹெலிகாப்டர் வாடகை வழக்கு
இந்நிலையில், ஆங் சான் சூகி பதவியில் இருந்த போது, அமைச்சர் ஒருவருக்கு ஹெலிகாப்டரை வாடகைக்கு கொடுத்ததில் அரசாங்க விதிகள் மீறப்பட்டிருப்பதாக கூறி அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள், ஆங் சான் சூகிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக கூறி அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டனர்.

33 ஆண்டுகள் சிறை
இந்த 7 ஆண்டுகளுடன் சேர்த்து ஆங் சான் சூகிக்கு மொத்தம் 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைத்திருக்கிறது. இந்த 33 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அவர் வீட்டுக்காவலிலேயே கழிக்கலாம் என ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆங் சான் சூகிக்கு எதிராக மியான்மர் ராணுவம் எடுத்து வரும் இந்த நடவடிக்கைகளை பல்வேறு உலக நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் கண்டித்துள்ளன. மேலும், ஐநா சபை கூட கடந்த வாரம் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு, ஆங் சான் சூகியை விடுவிக்க வேண்டும் என மியான்மர் ராணுவத்தை அறிவுறுத்தியது. ஆனால், ஐநா அறிவுறுத்தலை அந்நாட்டு ராணுவம் கண்டுகொள்ளவில்லை.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications