முதல்முறையாக.. 50 வருடங்களுக்கு பிறகு 4 பேரை தூக்கிலிட்டது ராணுவ ஆட்சி.. மியான்மர் மக்கள் அதிர்ச்சி
மியான்மரில் 4 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது
நைபியிடவ்: மியான்மரில் 4 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.. கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு பிறகு, இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
மியான்மரில் ஆங் சான் சூச்சி தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்பட்டு, ராணுவ ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், ராணுவ ஆட்சிக்கு எதிராக பயங்கரவாத செயல்களை தூண்டிவிட்ட புகாரில் 4 பேருக்கு தூண்டனை வழங்கப்பட்டிருந்தது..

கொலையாளிகள்
ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சியின் முன்னாள் எம்பி-யான பியோ ஜியா தாவ், கியாவ் மின் யு, ஹ்லா மியோ ஆங், ஆங் துரா ஸாவ் ஆகியோர்தான் மரணதண்டனைக்கு ஆளானவர்கள்.. இதில், சமூக செயற்பாட்டாளர் கோ ஜிம்மி, முன்னாள் எம்பி ஃபியோ ஜெயா தாவ் ஆகிய 2 பேர் மிக முக்கியமானவர்கள் ஆவார்கள்.. ஹ்லா மியோ ஆங், ஆங் துரா ஸாவ் 2 பேரும், யாங்கோன் நகரில், ராணுவத்துக்கு தகவல் தெரிவிக்கும் ஏஜென்டாக இருந்த ஒரு பெண்ணை கொலை செய்தவர்கள்.

மியான்மர்
இதனால், இவர்கள் கைதாகி தூக்கு தண்டனை பெற்றார்கள்.. மற்ற 2 பேரும் மியான்மருக்குள்ளும், சர்வதேச அளவிலும் புகழ்பெற்றவர்கள்.. பயங்கரவாத செயல்களில் ஈடுபட சதி செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட அந்த 4 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டது.. 50 வருடங்களுக்கு பிறகு தூக்கு தண்டனை மியான்மரில் நிறைவேற்றப்பட்டுள்ளது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.. ஆங் சான் சூச்சியின் ஜனநாயகக் கட்சி இந்த தண்டனை நிறைவேற்றத்தை கடுமையாக விமர்சித்துள்ளது.

தூக்கு தண்டனை
ராணுவம் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளின் கீழ் இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக காட்டமாக கூறியுள்ளது.. முன்னதாக, தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்ட 4 பேரின் குடும்பத்தினர் சிறைக்கு வெளியே கூடியிருந்ததால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.. எனினும், இந்த தண்டனையை எப்போது, எப்படி நிறைவேற்றப்பட்டது என்ற தகவல் வெளியாகவில்லை.. மியான்மர் ராணுவம் குடும்பத்தினருக்கு தகவல் ஏதும் அளிக்காமல் தூக்குத் தண்டனையை நிறைவேற்றியதற்கு அந்நாட்டு மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

வலுக்கும் கண்டனம்
இந்த 4 பேருக்கும் பொதுமன்னிப்பு அளிக்க கோரி ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.. அதை மியான்மரின் ராணுவ ஆட்சி ஏற்றுக் கொள்ளவில்லை.. ராணுவ அரசின் இந்த செயலுக்கும் கண்டனங்கள் வலுத்துள்ளன.. இதையடுத்து, மியான்மர் மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை விதிக்கக்கூடும் என்றும் சொல்கிறார்கள்.. 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றியதன் அதிர்ச்சியில் இருந்து அம்மக்கள் இன்னும் விடுபடவில்லை.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications