மியான்மர் நாடாளுமன்றத்தில் ஒரு முஸ்லிம் எம்.பி. கூட இல்லை....
யாங்கூன்: மியான்மர் நாட்டு நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் சிறுபான்மையினராகிய முஸ்லிம்கள் ஒருவர் கூட எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்படவில்லை. இருப்பினும் தேசிய லீக் கட்சித் தலைவர் ஆங்சான் சூயிதான் தங்களது நம்பிக்கைக்குரிய தலைவராக கருதுகின்றனர் முஸ்லிம்கள்.
மியான்மரில் சிறுபான்மை ரோகிங்கியா முஸ்லிம்களின் இஸ்லாம் மதம், பெரும்பான்மை புத்த மதத்துக்கு பெரும் அச்சுறுத்தல் என பேரினவாத அமைப்புகள் பிரசாரம் செய்தனர். இதன் விளைவாக முஸ்லிம்கள் கொடூரமாக தாக்கப்பட்டு அகதிகளாக்கப்பட்டனர்.

இந்நிலையில் அந்நாட்டில் நடைபெற்ற நாடாளுமன்றத்தில் மொத்தம் 6,074 வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக போட்டியிட்டனர். இவர்களில் 5,130 பேர் புத்த மதத்தினர்; 903 பேர் கிறிஸ்தவ மதத்தினர். ஆனால் 28 பேர் அதாவது 0.5% வேட்பாளர்கள் முஸ்லிம்கள்.
அதுவும் ஆளும் கட்சியாக இருந்த யு.எஸ்.டி.பி. எந்த ஒரு முஸ்லிம் வேட்பாளரையும் நிறுத்தவில்லை. ஆங்சான் சூயின் தேசிய லீக் கட்சியும், பேரினவாத இயக்கங்களுக்கு அஞ்சி முஸ்லிம்களை தேர்தலில் போட்டியிட வேண்டாம் என கேட்டுக் கொண்டது.
தேர்தலில் ஆங்சான் சூயின் தேசிய லீக் 390, யு.எஸ்.டி.பி. 41 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. கடந்த 2010, 2012ஆம் ஆண்டு இடைத்தேர்தல்களில் ரோகிங்கியா முஸ்லிம்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை.
இருப்பினும் முஸ்லிம்களின் நம்பிக்கைக்குரிய தலைவராக ஆங்சான் சூயிதான் இருந்து வருகிறார்.. அதுவும் அவரது கட்சியின் சார்பில் முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப்படாத போதும் அவரே நம்பிக்கைக்குரியவராக கருதுகிறார் மியான்மர் முஸ்லிம்கள்....
நம்பிக்கையை நிறைவேற்றுவாரா ஆங்சான் சூயி?
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications