3,000 மீட்டர் கடல் ஆழத்தில் மர்ம உலகம்.. டக்னு 110 புதிய உருவங்களை கண்டு ஆடிப்போன விஞ்ஞானிகள்
சிட்னி: ஆஸ்திரேலியா நாட்டின் கோரல் கடல் (Coral Sea) பகுதியில் நடத்தப்பட்ட ஆழ்கடல் ஆய்வில், இதுவரை மனிதக் கண்களுக்குத் புலப்படாத 110-க்கும் மேற்பட்ட புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.. சர்வதேச கடல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சிசிரோ (CSIRO) விஞ்ஞானிகள் இணைந்து நடத்திய இந்த தேடுதல் வேட்டையில், கடலின் ஆழமான மர்மங்கள் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியுள்ளன.. பவளப்பாறைகள் முதல் விசித்திரமான மீன்கள் வரை ஆழ்கடலில் ஒளிந்திருந்த இந்த புதிய உலகத்தை பற்றிய அதிரடித் தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளன.
ஆஸ்திரேலியாவின் கோரல் கடல் (Coral Sea) பகுதியில், விஞ்ஞானிகள் ஒரு பெரிய ஆய்வு செய்துள்ளனர்.. அந்த ஆய்வில் கடலின் ஆழமான பகுதிகளில் இதுவரை மனிதர்களுக்குத் தெரியாத 110-க்கும் மேற்பட்ட புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

110 -க்கும் மேற்பட்ட உயிரினங்கள்
இந்த உயிரினங்கள் மீன்கள், சுறா போன்ற கடல் உயிரினங்கள், நண்டு, கடல் பூச்சிகள், பவளப் பாறை உயிரினங்கள் போன்ற பல வகைகளாக உள்ளன.. சில இடங்களில் இந்த எண்ணிக்கை 200-க்கும் மேல் கூட இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்..
இந்த ஆய்வு, கடலின் மிகவும் ஆழமான (200 மீட்டர் முதல் 3,000 மீட்டர் வரை) பகுதிகளில் நடைபெற்றது.. இந்தப் பகுதிகள் இதுவரை மிகக் குறைவாகவே ஆராயப்பட்டிருந்தன.. சிசிரோ (CSIRO) என்ற ஆஸ்திரேலிய அறிவியல் நிறுவனம் மற்றும் சர்வதேச கடல் ஆய்வு குழு சேர்ந்து இந்த ஆராய்ச்சியை செய்துள்ளனர்.. ஆய்வுக்குப் பயன்படுத்தப்பட்ட கப்பல் கடலில் சென்று, தேவையான மாதிரிகளையும் சேகரித்து, அதற்கு பிறகே ஆய்வகத்தில் புதிய இனங்களை அடையாளம் கண்டுள்ளனர்.
கடல் நண்டுகள், கடல் பஞ்சுகள்
இந்த பிரம்மாண்ட ஆய்வில்தான் 110-க்கும் மேற்பட்ட புதிய உயிரினங்கள் கண்டறியப்பட்டுள்ளன.. அவை அனைத்துமே அரிய வகை உயிரினங்கள்தான்..
அதாவது பல அரிய வகை கடல் நண்டுகள் (Squat Lobsters), வித்தியாசமான கடல் பஞ்சுகள் (Sponges) மற்றும் இதுவரை பார்த்திராத மென்மையான பவளப்பாறைகள் போன்றவை அடங்கும்.
குறிப்பாக, சுமார் 3,000 மீட்டர் ஆழத்தில் இவ்வளவு செழிப்பான மற்றும் புதிய வகை உயிரினங்கள் வாழ்ந்து வருவது விஞ்ஞானிகளையே வியப்பில் ஆழ்த்தியுள்ளதாம்.. சிசிரோ மற்றும் ஓஷன் சென்சஸ் அமைப்பின் இந்தத் தேடுதல் வேட்டையானது, கடலின் ஆழமான பகுதிகளில் இன்னும் கண்டறியப்படாத ஆயிரக்கணக்கான உயிரினங்கள் இருக்கலாம் என்பதை மீண்டும் ஒருமுறை உறுதி செய்துள்ளது.
கடலுக்கு அடியில் அதிசயம்
இதை பற்றி விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? கடலின் இந்தப் பகுதி இன்னும் முழுமையாக ஆராயப்படவில்லை.. அதனால் எதிர்காலத்தில் இன்னும் நிறைய புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்க வாய்ப்பு உள்ளது. இந்த கண்டுபிடிப்பு உலகின் கடல்சார் உயிரியல் வரலாற்றில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.
ஆக மொத்தம் இது கடலின் ஆழத்தில் இன்னும் தெரியாத ஒரு பெரிய உயிரியல் உலகம் இருப்பதை காட்டும் முக்கியமான கண்டுபிடிப்பாகவே கருதப்படுகிறது.. அதுமட்டுமல்ல, ஒரு சின்ன உயிரினத்தில் தொடங்கிய மாற்றங்கள், இன்று கோடிக்கணக்கான உயிரினங்களின் வாழ்க்கை முறையாக மாறியிருப்பதும் கவனிக்கத்தக்கது...!!
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications