ஒட்டுதுணியில்லாமல் விமானத்தில் இருந்து குதித்தபடியே வயலின் வாசித்த இசை கலைஞர்
தனது பிறந்தநாளின் போது எதையாவது சாதிக்க வேண்டும் என்பதற்காக விமானத்திலிருந்து நிர்வாணமாக வயலின் வாசித்தபடியே குதித்தார்.
சிட்னி: ஆஸ்திரேலியன் இசைக் கலைஞர் ஒருவர் தனது பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாட வேண்டும் என்பதற்காக விமானத்தில் இருந்த நிர்வாணமாக வயலின் வாசித்தபடியே குதித்தார்.
பிறந்தோம், வளர்ந்தோம் என்றில்லாமல் எதையாவது சாதிக்க வேண்டும் என்று இம்மண்ணில் பிறந்த அனைவரும் கருதுகின்றனர். அந்த வகையில் ஏராளமான சாகசங்களையும் செய்கின்றனர்.
சில நமக்கு ஆச்சரியத்தையும் சில சாகசங்கள் முகச்சுளிப்பையும் ஏற்படுத்தும். எனினும் பிறந்த நாளை கொண்டாடுவதில் கூட சாகசம் செய்ய வேண்டுமா? கொண்டாடினால் என்ன தவறு என்கிறீர்களா?.

வயலின் கலைஞர்
ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் க்ளென் டொனிலி (30). அவர் வயலின் இசை கலைஞர். அவருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பிறந்தநாளாம். இதை சாகசமாக கொண்டாட வேண்டும் என்று டொனிலி கருதினார்.

விமானத்தில் இருந்து...
இதைத் தொடர்ந்து விமானத்தில் பயணம் செய்தார். விமானம் நியூ சௌத் வேல்ஸ் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென இருக்கையைவிட்டு எழுந்த டொனிலி, தான் அணிந்திருந்த துணிகளை விலக்கினார்.

நிர்வாணமாக குதித்தார்
டொனிலி உடம்பில் ஒட்டு துணியில்லாததை கண்ட சக பயணிகள் அதுவும் பெண் பயணிகள் அச்சமடைந்தனர். விமானம் 15,000 அடி உயரத்தில் அதாவது 4,570 மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருந்தது.

ஹேப்பி பர்த்டே பாடல்
இதைத் தொடர்ந்து காப்ஸ் ஹார்பர் நகரில் பாதுகாப்புக்காக அணியப்படும் தோல்வாரைத் தவிர வேறு எதையும் அணியாமல், தனது வயலினுடன் விமானத்தில் இருந்து டொனிலி குதித்தார். அப்போது மிகவும் பிரசித்தி பெற்ற ஹேப்பி பர்த்டே பாடலை வாசித்தபடியே குதித்தார்.
பதற்றமானேன்
தனது சாகசம் குறித்து டொனிலி கூறுகையில், வானத்தில் இருந்து குதிக்கும்போது எனக்கு உண்டாகும் பயமும் பதற்றமும், பிறர் முன்பு ஆடைகளைக் களையும்போதும் உண்டானது. அவற்றில் இருந்து மீண்டு வர இன்னும் நான் முயன்று வருகிறேன் என தெரிவித்துள்ளார்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications