டிரஸ்ஸே இல்லாமல்.. ஒரு சவாரி.. நல்ல விஷயத்துக்காக.. இளம் பெண்ணின் தில் துணிச்சல்.. சபாஷ்!

லண்டன் பெண் ஒருவர் நிதி திரட்டுவதற்காக நிர்வாணமாக சைக்கிள் ஓட்டினார்

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: தற்கொலைகளை தடுப்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்த, நிர்வாணமாக சைக்கிள் சவாரி செய்து நிதி திரட்டி உள்ளார் ஒரு இளம்பெண்.. இந்த பெண்ணின் துணிச்சல் மிகுந்த அந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

லண்டனை சேர்நத் இளம்பெண் கெர்ரி பார்ன்ஸ்.. இவரது சொந்தக்காரர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டார்.. அந்த மரணம் கெர்ரியை அதிகமாகவே உலுக்கிவிட்டது.

Naked woman cycles around london for Charity

ரொம்ப நாளைக்கு அழுது கொண்டே இருந்தவர், மனித வாழ்க்கையின் துயரம், துன்பங்கள் இதுதானோ? இப்படிப்பட்ட சுருங்கிய வாழ்க்கையில் நம்முடைய பங்களிப்பு ஏதாவது இருக்க வேண்டும், தற்கொலைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று நினைத்தார்.

அதற்காக, தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு நிதி திரட்டி தரலாம் என்று முடிவு செய்தார்.. மனநல சுகாதார தொண்டு நிறுவனமான மைன்ட் (MIND) நிறுவனத்திற்கு நிதி திரட்டும் முயற்சியிலும் இறங்கினார். ஆனால், அவரது முயற்சிகள் ஆரம்பத்தில் பெருமளவு வெற்றியை தரவில்லை.

அதனால் வேறு எப்படி பணத்தை திரட்டுவது என்று யோசிக்கும்போது, பைக் சவாரி பற்றி பெர்ரியின் நண்பர் ஐடியா தந்தார்.. ஆனால் அவர் விளையாட்டாகதான் இதை சொன்னார்.. பெர்ரிதான் சீரியஸாகவே இதை எடுத்துக் கொண்டு குட் ஐடியா என்று சொல்லிவிட்டு களத்தில் குதித்தார்.

அதன்படியே சைக்கிளில் நிர்வாணமாகவே வலம் வந்தார்.. நிர்வாணமாக லண்டனைச் சுற்றி 10 மைல் சைக்கிள் ஓட்டியுள்ளார்.தற்கொலை தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு இந்த சவாரியை முன்னெடுத்தார்.. இதுகுறித்து பெர்ரி சொல்லும்போது, "தற்கொலைகளை தடுக்க வேண்டும் என்று நினைத்தேன்.. அதற்காக கொஞ்சம் பணம் திரட்டுவதற்கும் நான் விரும்பினேன்.

ஏன் என்றால், லாக்டவுன் போடப்பட்டதில் இருந்தே நிறைய தற்கொலைகள் நடந்து வருகிறது.. அந்த வகையில்தான் என் உறவினர் ஒருவரும் தற்கொலை செய்து கொண்டார்.. அதனால், நான் செய்வது தவறா, கேலிக்குரியதா என்று தெரியவில்லை.. ஆனால் நான் நிர்வாணமாக சைக்கிள் சவாரி செய்து, அதை சோஷியல் மீடியாவில் பதிவிட்டேன்.. நல்ல ஆதரவு எனக்கு கிடைத்துள்ளது.. இந்த நிதி உதவிகள் மூலம் தற்கொலைகள் ஓரளவு குறைந்தாலும் எனக்கு மகிழ்ச்சிதான் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+