சிங்கப்பூர் மாரியம்மன் கோயிலில் மோடி வழிபாடு!
சிங்கப்பூரில் தமிழர்களால் கட்டப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டு வரும் மாரியம்மன் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி அம்மன் தரிசனம் செய்தார்.
சிங்கப்பூர்: பிரதமர் நரேந்திர மோடி சிங்கப்பூரிலுள்ள தமிழர்கள் வழிபடும் மாரியம்மன் கோயிலுக்கு சென்று அம்மனை தரிசனம் செய்து ஆசி பெற்றார்.
அரசு முறை பயணமாக இந்தோனேசியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு 5 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. செவ்வாய்க்கிழமை, இந்தோனேஷியா சென்ற மோடி, நேற்றுமுன் தினம் முதல் சிங்கப்பூரில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். சிங்கப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் வரும் பிரதமர் மோடி, இன்று சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் கோ சோக் டாங் உடன் சந்திப்பு நிகழ்த்தினார்.

இதையடுத்து, மகாத்மா காந்தியின் நினைவிடங்களுக்கு கோ சோக் டாங்குடன் மோடி சென்று மரியாதை செலுத்தினார். பின்னர் அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை செயலர் ஜேம்ஸ் மேட்டீஸ் உடன் நரேந்திர மோடி சந்தித்து பேசினார்.
இதன்பின்னர், சிங்கப்பூரில் தமிழர்களால் கட்டப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டு வரும் மாரியம்மன் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி அம்மன் தரிசனம் செய்தார். கோயில் நிர்வாகிகள் முன்னதாக அவரை வரவேற்று அழைத்து சென்றனர். கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பிரதமர் மோடிக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது.
Prime Minister Narendra Modi visted #Singapore's Mariamman Temple. pic.twitter.com/DlwpGqxChI
— ANI (@ANI) June 2, 2018
மேலும் சிங்கப்பூரில் உள்ள மற்றொரு புகழ்பெற்ற வழிபாட்டு தலமான சூலியா மசூதிக்கும் பிரதமர் மோடி சென்றார். சிங்கப்பூர் கலச்சார அமைச்சர் கிரேஸ் யென் உடனிருந்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications