செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவதில் இவ்வளவு சிக்கலா! கொஞ்சம் ரிஸ்க்தான்
வாஷிங்டன்: விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதே ஒரு காலத்தில் பெரிய விஷயமாக இருந்தது. ஆனால் இன்று விண்வெளிக்கு டூர் வந்துவிட்டது. இந்நிலையில் செவ்வாய்க்கு மனிதனை அனுப்ப விஞ்ஞானிகள் திட்டமிட்டு வருகின்றனர்.
இந்த திட்டத்தில் பெரிய பிரச்சனைகள் இருக்கின்றன. பார்க்க பூமி போன்றே இருந்தாலும் செவ்வாய் கிரகம் ஓர் இறந்து போன பூமி. இந்நிலையில் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் உள்ள பிரச்சனைகள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

1. நீண்ட தூர பயணம்
2. வெப்பக் கதிர்கள்
3. இருதய & எலும்பு பிரச்சினைகள்
4. உளவியல் பிரச்சினைகள்
5. குழுவினரிடையே மோதல்கள்
இந்த 5 பிரச்சனைகள் செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்புவதில் இருக்கிறது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். முதல் விஷயத்தை பொறுத்தவரை பூமிக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் இடையே 22.5 கோடி கி.மீ தொலைவு இருக்கிறது. பூமியிலிருந்து நிலவுக்கு செல்ல வெறும் 3 நாட்கள் போதும். ஆனால் செவ்வாய் கிரகத்திற்கு சென்று சேர 3 ஆண்டுகள் வரை ஆகும். மட்டுமல்லாது பூமியிலிருந்து நாம் ஏதாவது சிக்னல் அனுப்பினால் அது செவ்வாய் கிரகத்திற்கு போய் சேர 20 நிமிடங்கள் வரை ஆகலாம்.
செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் விண்வெளி வீரர்கள், அவர்கள் கொண்டு சென்ற உபகரணங்கள் பழுதாகினால் அல்லது மருத்துவ அவசரநிலை ஏற்பட்டால், நிலைமை மோசமாகலாம். பூமியில் இருந்து உடனடி உதவி கிடைக்காது என்பதால் வீரர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டிய நிலை இருக்கும்.
பூமியில் காந்தவலயம் இருப்பதால் நம்மை நோக்கி வரும் புறஊதா கதிர்கள், இதர பல ஆபத்தான சூரிய கதிர்கள் வடிகட்டப்பட்டுவிடுகிறது. செவ்வாயில் அப்படி கிடையாது. எனவே புற்றுநோய் அபாயம், நரம்பு பாதிப்பு, இதய நோய்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
செவ்வாய்க்கு போகும் பயணம் மிக நீண்டது. இந்த பயணத்தில் ஈர்ப்பு விசை இருக்காது. இதனால் உடலில் உள்ள திரவங்கள் தலையை நோக்கி செல்கின்றன. இது முகம் வீங்குதல் மற்றும் கண்பார்வை பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஈர்ப்பு விசை இல்லாததால் எலும்பு மற்றும் தசைகள் பலவீனமடைந்து, மெதுவாக செயலிழக்க வாய்ப்பு இருக்கிறது. செவ்வாய் கிரகத்திற்கு சென்று திரும்புவோரின் இரத்த அழுத்தம் சரியாக கட்டுப்படுத்த முடியாது. சமநிலை & இயக்கக் கணிப்புத் திறனும் (Balance & Coordination) பாதிக்கப்படும்.
செவ்வாய் ரொம்ப தூரத்தில் இருப்பதால் நீண்டகால தனிமையை அனுபவிக்க வேண்டும். குறைந்தபட்சம் 10 வருடங்களாவது தனியாக இருக்க வேண்டும். இது மன அழுத்தம், மனநிலை பாதிப்பு, நினைவாற்றல் குறைவு, மனச்சோர்வு, தூக்க கோளாறுகள் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தும்.
மட்டுமல்லாது இந்த பயணத்தின்போது ஒரே குழுவுடன் நீண்ட ஆண்டுகளுக்கு வீரர்கள் இருக்க வேண்டும். இதனால் சண்டை சச்சரவுகள் ஏற்படும். ஆக மனிதர்களை செவ்வாய்க்கு அனுப்பும் திட்டம் விஞ்ஞான மற்றும் மருத்துவ சவால்களை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இன்னும் சில மணி நேரத்தில்.. விண்வெளி வீரர்கள் உள்ள சாட்டிலைட் உடனான சிக்னலை இழக்க போகும் நாசா! -
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
வேட்பாளர் லிஸ்டில் பெயர் இல்லை.. அண்ணாமலை இன்று மாலையே முக்கிய மூவ்.. வியந்து போன வானதி.. அசத்தல் -
1988ல் "மக்கள் ஆணையிட்டால்" படத்தில்! விஜயகாந்துக்காக ஸ்டாலின் பாடிய பாடல் இதுதான்! -
கொத்தாக காலியாகும் டெபாசிட்.. தவெக விஜய்க்கு பெரிய சிக்கல்.. 3 பெரிய சர்வேவில் இருக்கும் வார்னிங்! -
திசைமாறிய திருமாவளவன்.. திடீரென தேர்தல் ‘ரிவர்ஸ்’ கியர்.. அப்செட்டான திமுக! இதான் ரியல் காரணம்? -
மகளிர் உரிமை தொகை ரூ.2 ஆயிரம், ரூ.8,000 கூப்பன் வாக்குறுதிகள் என்னை கவர்ந்தது.. நடிகை ரோகிணி! -
ராஜ்யசபா எம்பி சீட் தருவதாக கூறி ஏமாற்றியவர் எடப்பாடி பழனிசாமி! ஆதாரத்தை காட்டி பிரேமலதா விமர்சனம் -
திமுக கூட்டணியின் 'பவர் மேக்னட்' ஆன பிரேமலதா.. ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications