தலைவலி தரும் ரஷ்யா.. டிரம்ப்பின் அழுத்தத்திற்கு பணிந்த நேட்டோ நாடுகள்.. அமெரிக்கா குஷி
ஜெனிவா: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அழுத்தத்திற்குப் பிறகு நேட்டோ தலைவர்கள் பாதுகாப்பு செலவினங்களை பெருமளவில் உயர்த்த ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். ஏதாவது பிரச்சனை என்றால், உடனே ஒருவருக்கு ஒருவர் ஓடி வந்து உதவ வேண்டும் என்றும் நேட்டோ நாடுகள் உறுதிப்பாடு எடுத்தனர்.
ஊரில் இரண்டு பெரிய ஆயுத வியாபாரிகள் இருப்பார். அவருக்கு யாராவது சண்டை போட்டால் தான் ஆயுதங்கள் அதிகமாக விற்பனையாகும்.ஆனால் யாருமே சண்டை போடாமல் இருந்தால் விற்பனையோ ஆகாது. அப்படிப்பட்ட சூழலில் திடீர் திடீரென பிரச்சனைகள் உருவாகும். அதனை யார் உருவாக்கினார்கள்.. என்பது தெரியாது. இறுதியில் ஆயுத விற்பனை அமோகமாகும். அப்படித்தான் உலகத்தில் நடக்கிறது. ஒரு பக்கம் அமெரிக்காவும், இன்னொரு பக்கம் ரஷ்யாவும் ஆயுத வியாபாரிகளாக இருக்கின்றன. இதற்கு அடுத்த படியாக சீனா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஆயுத வியாபாரிகளாக உள்ளன.

இந்நிலையில் இஸ்ரேல் பாலஸ்தீனம், இஸ்ரேல் ஈரான், இந்தியா பாகிஸ்தான், உக்ரைன் ரஷ்யா, வடகொரியா தென் கொரியான என உலக நாடுகள் பல்வேறு வகையில் மோதிக்கொண்டிருக்கின்றன. இதுதவிர ஏமன், லெபனான், ஈரான், பாகிஸ்தான் மற்றும் பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளில் கிளர்ச்சி குழுமோதல்கள் நடந்து வருகிறது.
மேற்கு உலகம் தான் மிகவும் பாதுகாப்பானதாக இருக்கிறது. அமெரிக்கா தலைமையில் மேற்கு உலக நாடுகள் நேட்டா என்ற கூட்டுப்படையை அமைத்து தங்களை பாதுகாத்து வருகின்றன. அதாவது நேட்டோ' எனப்படும் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த, 30 நாடுகள் இடம்பெற்றுள்ளன. ராணுவ ஒத்துழைப்புக்கானது இந்த அமைப்பு ஆகும்.
இந்நிலையில் ஐரோப்பாவில் உள்ள அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில், ராணுவத்துக்கான முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என, நேட்டோ நாடுகளுக்கு, அமெரிக்கா அதிபர் டிரம்ப் ஆலோசனை கூறியிருந்தார். ஏனெனில் இந்த குழுவின் நாட்டாமை என்று சொல்லும் இடத்தில் அமெரிக்கா இருக்கிறது.
இந்நிலையில் நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் 'நேட்டோ' அமைப்பின் கூட்டம் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரிட்டன் பிரதமர் கெயிர் ஸ்டார்மர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது, தனிப்பட்ட மற்றும் கூட்டுக் கடமைகளை உறுதி செய்ய 2035ம் ஆண்டிற்குள் முக்கிய பாதுகாப்பு தேவைகள் மற்றும் ராணுவம் தொடர்பான செலவினங்களுக்காக ஆண்டுதோறும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்(ஜிடிபி) 5 சதவீதம் முதலீடு செய்வது என முடிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் நேட்டோ அமைப்பில் உள்ள எந்த ஒரு நாட்டை தாக்கினாலும், அது அனைத்து உறுப்பு நாடுகள் மீதான தாக்குதல் என கருதுவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது
அதே நேரத்தில் இந்த கூட்டம் துவங்குவதற்கு முன்னரே பாதுகாப்புதொகையை உயர்த்தும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஸ்பெயின், 2035 காலக்கெடுவுக்குள் இலக்கை அடைய முடியாது எனவும், இது நியாயமற்றது எனவும் கூறியிருக்கிறது. பெல்ஜியமும் இதேபோன்ற கருத்தை மறைமுகமாக தெரிவித்துள்ளது. ஸ்லோவேகியா, தனது பாதுகாப்பு செலவினங்களை தாங்களே தீர்மானிப்போம் என அறிவித்திருக்கின்றன, அதேநேரம் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அழுத்தத்திற்குப் பிறகு பெரும்பாலான நேட்டோ தலைவர்கள் பாதுகாப்பு செலவினங்களை பெருமளவில் உயர்த்த ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். ரஷ்யாவால் ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தலை மறு மதிப்பீடு செய்யவும் 2029 இல் செலவினங்களை மறுஆய்வு செய்வதற்கும் நேட்டோ நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.
இதனிடையே நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ருட்டே தனக்கு அனுப்பிய செய்தியின் ஸ்கிரீன் ஷாட்டை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டார், அதில், "ஈரானில் உங்கள் தீர்க்கமான நடவடிக்கைக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றி, அது உண்மையிலேயே அசாதாரணமானது, வேறு யாரும் செய்யத் துணியாத ஒன்று. இது நம் அனைவரையும் பாதுகாப்பானதாக்கி உள்ளது." என்று டிரம்பை மார்க் ருட்டே பாராட்டி உள்ளார்.












Click it and Unblock the Notifications