Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போலாந்துக்கு ஆதரவாக களமிறங்கும் ரஃபேல் விமானங்கள்.. ரஷ்ய-உக்ரைன் போரில் நுழையும் நேட்டோ!

Subscribe to Oneindia Tamil

வார்சா: ஐரோப்பாவின் கிழக்கு எல்லையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில், நேட்டோ அமைப்பு "ஈஸ்டர்ன் சென்ட்ரி" என்ற புதிய இராணுவ நடவடிக்கையை அறிவித்துள்ளது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் தொடங்கிய பின்னர் நேட்டோ மேற்கொள்ளும் முதல் ராணுவ நடவடிக்கை இதுதான்.

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவத்தில் இணைய, ரஷ்யாவின் பக்கத்து நாடான உக்ரைன் ஆசைப்பட, ரஷ்யா தொடர்ந்து எதிர்த்து. இருப்பினும் கேட்காத உக்ரைன், ஒற்றை காலில் நிற்க, ரஷ்யா வேறு வழியில்லாமல் 2022ல் உக்ரைன் மீது போரை தொடங்க அது இன்று வரை நீடித்து வருகிறது.

NATO Russia Belarus

நேட்டோ

தற்போது போர் கொஞ்சம் சீரியஸாக போய்க்கொண்டிக்கிறது. இந்த நிலையில்தான் ஆர்வக்கோளாறாக ரஷ்யா ஒரு வேளையை பார்த்துவிட்டது. அதாவது, உக்ரைனுக்கு ட்ரோன் அனுப்ப சொன்னால், ரஷ்ய வீரர்கள் லொகேஷனை மாற்றி போலாந்துக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அனுப்பப்பட்ட ட்ரோன்கள் அங்குள்ள இடங்களை தாக்கியிருக்கிறது. போலாந்து சும்மா இருக்குமா? இத்தனைக்கும் அது நேட்டோவில் உள்ள நாடு. இதுதான் பிரச்சனையே! அதாவது நேட்டோவில் எந்த நாடு உறுப்பினராக இருக்கிறதோ, அந்த நாட்டின் மீது வெளியிலிருந்து வேறு நாடு தாக்குதல் நடத்தினால் மொத்த நேட்டோ படைகளும் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு ஆதரவாக வந்து தாக்கும்.

"ஈஸ்டர்ன் சென்ட்ரி" என்றால் என்ன?

இதன் அடிப்படையில் தற்போது நேட்டோ தனது ராணுவ நடவடிக்கையை போலாந்துக்கு ஆதரவாக தொடங்கியிருக்கிறது. அதாவது நேட்டோ தனது தரைப்படை மற்றும் விமானப்படையை ஒருங்கிணைக்க தொடங்கியிருக்கிறது. இப்போது வரை டென்மார்க், பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் தங்கள் படைகளை ஒருங்கிணைக்க தொடங்கியிருக்கின்றன. மேலும் பல நாடுகள் இதில் சேரும் என சொல்லப்படுகிறது. நேட்டோவில் மொத்தம் 32 நாடுகள் உறுப்பினராக இருக்கின்றன.

புதிய உச்சத்தை எட்டும் போர்

இது குறித்து நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே பேசுகையில் "ரஷ்யாவின் செயல் பொறுப்பற்றது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. நேட்டோ உறுப்பு நாடுகளின் வான் எல்லைக்குள் ரஷ்ய ஆளில்லா விமானங்கள் நுழைவதை நாம் அனுமதிக்க முடியாது" என்று கூறியிருக்கிறார். அதேபோல நேட்டோவின் தலைமை தளபதியும், அமெரிக்க விமானப்படை ஜெனரலுமான அலெக்ஸஸ் க்ரின்கேவிச் கூறுகையில், "நேட்டோ தனது பிரதேசத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் பாதுகாக்கும்" என தெரிவித்திருக்கிறார்.

தம்மாத்துண்டு நாடான போலாந்துக்கு எதுக்கு இவ்வளவு சீன் என கேள்வி எழலாம். போலாந்துக்கு ஆதரவாக நேட்டோ வர காரணம் இருக்கிறது. நேட்டோவின் மிக வலுவான ஆதரவாளர்களில் போலந்தும் ஒன்று. அது தனது பொருளாதாரத்தின் பெரும் பகுதியை தற்காப்புக்காக செலவிடுகிறது, இது அமெரிக்காவை விட அதிகம். இதுதான் காரணம்.

ரஷ்யாவின் பதிலடி

மறுபுறம், ரஷ்யாவும் பெலாரஸும் தங்கள் கூட்டு இராணுவப் பயிற்சியை தொடங்கியிருக்கின்றன. ஆயிரக்கணக்கான துருப்புக்கள் இந்த பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பயிற்சி செவ்வாய்க்கிழமை வரை இரு நாடுகளிலும் நடைபெறும். பெலாரஸின் மேற்கு எல்லைக்கு அருகில் முக்கிய கவனம் செலுத்தப்படுகிறது. எனெனில் பெலாரசுக்கு பக்ககத்து நாடுதான் போலாந்து. பயிற்சியின் தொடக்கத்தில் 13,000 வீரர்கள் பங்கேற்பார்கள் என்று பெலாரஸ் கூறியுள்ளது.

நேட்டோவின் கிழக்கு எல்லையைப் பாதுகாக்க பிரான்ஸ் மூன்று ரஃபேல் போர் விமானங்களை போலந்துக்கு அனுப்புகிறது என்பது கவனிக்கத்தக்கது. இதனால் நேட்டோ-ரஷ்யா இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இது தீவிரமடைந்தால் மூன்றாம் உலகப்போராகவும் வெடிக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+