"பதவி ஆசை.. அதிகாரத்தில் இருக்க கெஞ்சினார்.. மன்றாடினார்!" போட்டு உடைக்கும் நவாஸ் ஷெரீப் மகள்
லாகூர்: பாகிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பம் இப்போது தான் மெல்லத் தீர்ந்து வரும் சூழலில், இது தொடர்பாக நவாஸ் ஷெரீப் மகள் மரியம் நவாஸ் விமர்சனம் செய்துள்ளார்.
பாகிஸ்தான் நாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பிரதமராக இருந்தவர் இம்ரான் கான். அங்கு சில ஆண்டுகளாகவே பொருளாதாரம் தொடர்ந்து மோசமடைந்து வந்த நிலையில், அதை இம்ரான் கானால் சமாளிக்க முடியவில்லை.
இதையடுத்து அவருக்கு எதிராக எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். கூட்டணி கட்சியினரும் எதிராகத் திரும்ப இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது.

பாகிஸ்தான் அரசியல்
இருப்பினும், இதெல்லாம் எளிதாக நடந்து முடியவில்லை. நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முதலில் செல்லாது என்று சபாநாயகர் அறிவித்தார். அதை எதிர்த்து அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தை எதிர்க்கட்சிகள் நாடினர். அதை விசாரித்த நீதிமன்றம், சபாநாயகர் முடிவை ரத்து செய்தார். மேலும், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தவும் உத்தரவிட்டார். அப்போது நடந்த வாக்கெடுப்பில் தான் இம்ரான் கான் பதவி விலகினார். இதையடுத்து எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் ஷெபாஸ் ஷெரீப் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கெஞ்சினார்
இந்நிலையில், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது, இம்ரான் கானின் செயல்பாடுகள் எப்படி இருந்தது என்பது குறித்து ஷெபாஸ் ஷெரீபின் மகளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் துணைத் தலைவருமான மரியம் நவாஸ் விமர்சித்துள்ளார். அதாவது இம்ரான் கான் அதிகாரத்தில் ஒட்டிக் கொள்ள முயற்சி செய்தார் என்றும் இதற்காகக் கடைசி வரை அவர் பாகிஸ்தான் ராணுவத்திடம் கெஞ்சினார் என்றும் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

பாக். ராணுவம்
பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகும் நிலையில், அங்குப் பல முறை ஆட்சி கவிழ்ப்புகளும் அரங்கேறி உள்ளன. பாகிஸ்தான் நாட்டில் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை விஷயங்களில் கூட அந்நாட்டின் ராணுவம் கணிசமான அதிகாரத்தைப் பெற்றுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் பாக். ராணுவத்தின் தலையீடு இருக்கலாம் என்று முதலில் கூறப்பட்டது. இருப்பினும், இந்த விவகாரத்தில் தங்களுக்குத் தொடர்பு இல்லை என்று அந்நாட்டு ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ராணுவத்திடம் மன்றாடினார்
நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்த போது இம்ரான் கான் எப்படி நடந்து கொண்டார் என்பது குறித்து ஷெபாஸ் ஷெரீபின் மகள் மரியம் நவாஸ் கூறுகையில், "இம்ரான் கான் பதவியைத் தக்க வைத்துக் கொள்ளக் கடைசி வரை முயன்றார். அவர் தனது அரசை காப்பாற்ற ராணுவத்திடம் கெஞ்சி மன்றாடினார். அவர் முன்னாள் அதிபரும் PPP துணைத் தலைவருமான ஆசிப் அலி சர்தாரியிடம் கூட நம்பிக்கையில்லாத் தீர்மானம் விவகாரத்தில் தனக்கு உதவ வேண்டும் என்று கோரியிருந்தார்.

புலம்பும் இம்ரான்
இம்ரான் கான் பதவி ஏற்ற முதல் நாளே பிரச்சனைகள் தொடங்கிவிட்டன. லண்டனில் இருந்து கொண்டே நவாஸ் ஷெரீப் தன்னை காலி செய்துவிட்டதாக இம்ரான் கான் புலம்பி வருகிறார். இப்போது நவாஸ் ஷெரீப் மீண்டும் பாகிஸ்தான் நாட்டிற்கு வரும்போது இம்ரான் கான் என்ன மனநிலையில் இருப்பார் என்பதைச் சற்று கற்பனை தான் செய்து பாருங்கள்.

எதுக்கு அரசியல்
மூன்று ஆண்டுகளில் இம்ரான் கானை காலி செய்துள்ளது தான் நவாஸ் ஷெரீப்பின் அரசியல், இம்ரான் கான் கிரிக்கெட் போட்டிகளில் தான் சிறந்தவர். அவருக்கு ஏன் இந்த அரசியல் விளையாட்டு எல்லாம். இம்ரான் கானும் அவரது அமைச்சர்களும் எல்லையற்ற ஊழல்களைச் செய்துள்ளனர். இந்த குற்றச்சாட்டுகள் விரைவில் நிரூபிக்கப்பட்டு அவர்கள் தண்டை பெறுவது உறுதி.

அவர் பேசலாமா
இந்த நாட்டை அவர் தவறான முறையில் வழிநடத்தினார். இம்ரான் கான் பாகிஸ்தான் இறையாண்மை, மரியாதை குறித்து ஏதேதோ பேசுகிறார். நாட்டின் பிரதமராக இருந்த போது கிடைத்த அதிகாரப்பூர்வ பரிசுகளை எல்லாம் கூட விட்டுவைக்காமல் துபாய் சர்வதேச சந்தையில் விற்றவர் தான் அவர். எனவே, அவருக்குப் பாகிஸ்தான் நாட்டின் இறையாண்மை குறித்ததெல்லாம் பேச அருகதை இல்லை" என்று சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications