இந்தியர்கள் சுயமரியாதை கொண்டவர்களா? அப்ப பாகிஸ்தானை விட்டு வெளியேறுங்கள்.. நவாஸ் ஷெரீப் மகள் மர்யம்
இஸ்லாமாபாத்: இந்தியாவை இம்ரான் கானுக்கு மிகவும் பிடித்திருந்தால் அவர் பாகிஸ்தானை விட்டு இந்தியாவுக்கு செல்ல வேண்டும் என முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மர்யம் நவாஸ் ஷெரீப் விமர்சித்துள்ளார்.
பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. இந்த நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை தவறாக வழிநடத்தியதாகக் குற்றம்சாட்டி அவருக்கு கொடுத்து வந்த ஆதரவை கூட்டணி கட்சிகள் வாபஸ் பெற்றன.
இதையடுத்து அவர் மீது எதிர்க்கட்சி சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. இதையடுத்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

நாடாளுமன்றம்
இந்த பிரச்சினையை அந்நாட்டு நாடாளுமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்ட இந்த விசாரணையில் நாடாளுமன்றத்தை இம்ரான் கான் கலைத்தது செல்லாது என்றும் அவரை இடைக்கால பிரதமராக ஆளுநர் அறிவித்ததும் செல்லாது என்றும் கூறிய உச்சநீதிமன்றம் ஏப்ரல் 9 ஆம் தேதி வாக்கெடுப்பை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டது.

பாகிஸ்தான் நாடாளுமன்றம் கூடுகிறது
அதன்படி இன்று பாகிஸ்தான் நாடாளுமன்றம் கூடுகிறது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவை சற்றும் எதிர்பாராத இம்ரான் கான் நேற்றைய தினம் மக்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் இந்தியாவை எந்த வல்லரசு நாடுகளும் கட்டுப்படுத்த முடியாது. இந்தியா, பாகிஸ்தான் இடையே நல்ல நட்புறவு இல்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன்.

சுயமரியாதை
இந்தியர்கள் சுய மரியாதை கொண்டவர்கள். ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தால் நான் அதிருப்தி அடைந்துள்ளேன். காஷ்மீரில் மாநில அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால்தான் இந்தியாவுடன் பாகிஸ்தானுக்கு நல்லுறவு இல்லை. இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றாகவே சுதந்திரம் பெற்றன.

வெளிநாட்டு சக்திகள்
ஆனால் பாகிஸ்தான் வெளிநாட்டு சக்திகளால் டிஷ்யூ பேப்பரை போல் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படுகிறது என்றார் இம்ரான் கான். இந்தியாவை இம்ரான் கான் புகழ்ந்து பேசியுள்ளதற்கு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மர்யம் நவாஸ் ஷெரீப் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பதவி பறி போனது
இதுகுறித்து அவர் கூறுகையில் பதவி பறி போன பிறகு மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் ஆன ஒருவருக்கு யாராவது சொல்லுங்கள், அவர் சொந்த கட்சியினராலேயே தூக்கி எறியப்பட்டார். அவரை வேறு யாரும் பதவியிலிருந்து தூக்கி எறியவில்லை.

இந்தியாவுக்கே செல்லுங்கள்
இந்தியாவை இம்ரான் கானுக்கு மிகவும் பிடித்துவிட்டால், அவர் பாகிஸ்தானிலிருந்து வெளியேறி இந்தியாவுக்கே சென்றுவிடலாம். பதவி பறி போன பிறகு இப்படி அழுது புலம்பும் ஒரு நபரை முதல்முறையாக நான் இப்போதுதான் பார்க்கிறேன் என கடுமையாக விமர்சித்துள்ளார் மர்யம்.












Click it and Unblock the Notifications