For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நேபாளம் மீண்டும் அடாவடி.. கந்தக் அணையில் பழுதுபார்க்கும் பணிகளை தடுக்கிறது.. பீகாரில் பேரழிவு அபாயம்

Google Oneindia Tamil News

காத்மாண்டு: இந்தியாவிற்கு மற்றொரு ஆத்திரமூட்டும் நடவடிக்கையில், நேபாளம் ஈடுபட்டுள்ளது. கந்தக் அணையில் வெள்ளத் தடுப்பு தொடர்பான பணிகளில் ஈடுபடுவதற்கு பீகார் மாநில அரசை அனுமதிக்கவில்லை. இது பீகார் மாநிலத்தில் பேரழிவுக்கு வழிவகுக்கும் என்று பீகார் அரசு கவலை தெரிவித்துள்ளது.

Recommended Video

    India- க்கு ஆபத்தை விளைவிக்கும் நேபாளத்தின் செயல்

    இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையே உறவில் நாளுக்கு நாள் விரிசல் அதிகரித்து வருகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கலபாணி, லிபுலேக், லிம்பியாதுரா போன்ற பகுதிகள் தங்களுக்கு சொந்தம் என்றும் அதை இந்தியா ஆக்கிரமித்ததாகக் கூறி வரை படத்தை நேபாளம் அண்மையில் வெளியிட்டது.

    இந்த வரைபடத்திற்கு நேபாள நாடாளுமன்றம் அண்மையில் ஒப்புதல் அளித்தது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.

     சீன ஊடகங்களுக்கு எதிராக அமெரிக்கா எடுத்த அதிரடி நடவடிக்கை.. மோசமாகும் இருநாட்டு உறவு சீன ஊடகங்களுக்கு எதிராக அமெரிக்கா எடுத்த அதிரடி நடவடிக்கை.. மோசமாகும் இருநாட்டு உறவு

    கந்தக் அணையில்

    கந்தக் அணையில்

    இதனிடையே நேபாள அரசு , இந்தியா தனது எல்லையில் சாலை பணிகளை மேம்படுத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், நேபாள எல்லையில் ஓடும் லால் பகேயா ஆற்றில் உள்ள கந்தக் அணையில் வெள்ளத் தடுப்பு பணிகள் மேற்கொள்வது இந்தியாவின் வழக்கம்.

    பராமபரிப்பு பணிக்கு

    பராமபரிப்பு பணிக்கு

    பீகார் மாநில எல்லையில் உள்ள இந்த அணையில் வெள்ளத்தடுப்புக்காக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள பீகார் மாநில அரசு வழக்கம் போல் முயற்சி மேற்கொண்டது. ஆனால் பீகார் மாநில அதிகாரிகளை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள நேபாள அரசு அனுமதிக்க மறுத்துவிட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    பீகார் அமைச்சர் கவலை

    பீகார் அமைச்சர் கவலை

    இது தொடர்பாக பீகார் நீர்வளத்துறை அமைச்சர் சஞ்சய் ஜா, கூறுகையில் "கந்தக் அணையில் 36 தடுப்புகள் உள்ளன, அவற்றில் 18 நேபாளத்தில் இருக்கிறது. வெள்ளத்தைத் தடுக்கும் பகுதியில் உள்ளன. ஆனால் நேபாளம் 18 இடங்களிலும் பணிகளை மேற்கொள்ள தடை விதித்துள்ளது. இது கடந்த காலத்தில் நடந்ததில்லை. இதுபோன்ற பிரச்சினையை நாங்கள் முதல்முறையாக எதிர்கொள்கிறோம் பழுதுபார்ப்பு பணிகளுக்கான மக்கள் மற்றும் மூலப்பொருட்களை நேபாள எல்லைக்குள் அனுமதிக்கவில்லை.

    கடிதம் எழுதுவோம்

    கடிதம் எழுதுவோம்

    பீகார் மாநில பொறியியலாளர்கள் மற்றும் மாவட்ட நீர் வளத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நேபாள அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். நேபாளத்துடனான தற்போதைய நிலைமை குறித்து வெளிவிவகார அமைச்சகத்திற்கு கடிதம் எழுத உள்ளோம். இந்த பிரச்சினை சரியான நேரத்தில் கவனிக்கப்படாவிட்டால், பீகாரின் பெரும்பகுதி மழைக்காலத்தில் வெள்ளத்தில் மூழ்கும்" என்றார்.

    எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

    எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

    வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுத பீகார் நீர்வளத்துறை அமைச்சர் எடுத்த முடிவுக்கு பதிலடி கொடுத்துள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரும் பீகார் முன்னாள் துணை முதல்வர் தேஜாஷ்வி யாதவ், நிதீஷ் குமார் தலைமையிலான மாநில அரசு மத்திய அரசின் மீது பொறுப்பை சுமத்தியதாக குற்றம் சாட்டினார். மாநிலத்திற்கு பருவமழை வந்த பின்னர் பீகார் அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறது என்றார். பீகார் மாநில அரசாங்கத்தின் தவறான நிர்வாகத்தால் பீகாரின் முழு வடக்கு பகுதியும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளது என்றும் அவர் அச்சம் தெரிவித்தார்.

    English summary
    Bihar: State Minister Sanjay Jha said that Nepal not allowing repair work at Gandak dam; it can lead to floods in Bihar:
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X