சீனா பரவாயில்லை.. இந்திய வைரஸ்தான் டேஞ்சர்.. அசால்ட்டாக பேசும் நேபாள பிரதமர்.. தொடர்ந்து சீண்டல்

Subscribe to Oneindia Tamil

காத்மாண்டு: இந்தியாவின் வழியே பரவும் வைரஸ் சீனா மற்றும் இத்தாலிய கொரோனா வைரஸை விட அபாயகரமானது. இந்திய வைரஸால்தான் நேபாளத்தில், அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர், என்று, நேபாள பிரதமர், கே.பி.சர்மா ஒலி சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.

Recommended Video

    இந்திய வைரஸ் தான் ஆபத்தானது... இந்தியாவை சீண்டும் நேபாள பிரதமர்

    சீனக் கட்டுப்பாட்டில் இருக்கும் திபெத்தின் மானசரோவர் பகுதிக்கு நுழைவாயிலாக இருக்கும் லிபுலேக் கணவாய்க்கு செல்லும் எல்லையோர சாலை ஒன்றை இந்தியா தொடங்கியது. இது சீனாவை கோபப்படுத்தியது. அத்தோடு, நேபாளமும் திடீரென கோபத்தை வெளிப்படுத்த தொடங்கியுள்ளது.

    Nepal Prime Minister KP Oli says Indian virus is more dangerous than China

    இந்நிலையில், நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி தலைமையில் இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில், இந்தியாவுடன், சர்ச்சைக்குரிய நிலங்கள் அடங்கிய, புதிய தேசிய வரைபடத்தை வெளியிட ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் இருக்கும் பகுதிகள் லிம்பியாதுரா, காலாபானி, லிபுலேக் ஆகியவை. இதை தங்கள் நாட்டின் பகுதிகளாகச் சேர்க்கப்பட்டிருக்கும் நேபாளத்தின் புதிய அரசியல் வரைபடத்திற்கு அந்த நாட்டின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    இது ஒருபக்கம் என்றால், நேபாள பிரதமர் வெளியிட்டுள்ள கருத்துக்களும், இந்தியாவை அதிர்ச்சியடையச் செய்வதாக உள்ளன.

    அவர் கூறியதை பாருங்கள்: சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து வருபவர்களால்தான், நேபாளத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதற்கு உள்ளூரை சேர்ந்த பிரமுகர்கள், சில அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர்தான் பொறுப்பு.

    இந்தியாவின் வழியே பரவும் வைரஸ் சீனா மற்றும் இத்தாலிய கொரோனா வைரஸை விட அபாயகரமானது. இந்திய வைரஸால்தான் நேபாளத்தில், அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர்.

    இந்தியா ஆக்கிரமித்துள்ள நேபாள பகுதிகளை திரும்ப பெறும் வரை நாங்கள் ஓயமாட்டோம். இந்த விஷயத்தில் யார் வருத்தம் அடைந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. எந்த விலை கொடுத்தாவது அப்பகுதிகளை மீட்போம். இவ்வாறு ஒலி தெரிவித்தார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+