நேபாளத்தின் புதிய அதிபராக வித்யாதேவி பண்டாரி தேர்வு- முதல் பெண் அதிபர்!
காத்மண்டு: நேபாள நாட்டின் புதிய அதிபராக நேபாள கம்யூனிஸ்ட்- ஐக்கிய மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வித்யாதேவி பண்டாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அந்நாட்டின் முதலாவது பெண் அதிபர் என்ற பெருமையை பெற்றுள்ளார் வித்யா பண்டாரி.
உலகின் ஒரே இந்துநாடு என்ற பெருமை கொண்டது நேபாளம். இங்கு 2008ஆம் ஆண்டுடன் மன்னராட்சி முடிவுக்கு வந்து மக்களாட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது.

2008ஆம் ஆண்டு ராம்பரத் யாதவ் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் அண்மையில் நேபாளத்துக்கான புதிய அரசியல் சாசனம் பிரகடனப்படுத்தப்பட்டது.
இந்துநாடாக இருந்த போதும் 'மதச்சார்பற்ற' நாடு நேபாளம் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து புதிய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் பிரதமராக ஷர்மா ஒளி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து புதிய அரசியலமைப்பு சட்டத்தின் கீழான முதலாவது அதிபர் தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் நேபாளி காங்கிரஸ் கட்சியின் குல் பகதுார் குருங், நேபாள கம்யூனிஸ்ட்- ஐக்கிய மார்க்சிஸ்ட் கட்சியின் (சி.எபி.என். யுஎம்எல்) வித்யாதேவி பண்டாரி, நேபாள உழைப்பாளர் மற்றும் விவசாயிகள் கட்சி சார்பில் நாராயண் மகாஜன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் ஐக்கிய மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வித்யாதேவி பண்டாரி தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்றைய தேர்தலில் மொத்தம் உள்ள 597 எம்.எல்.ஏ, எம்.பிக்களில் 549 பேர் வாக்களித்தனர். இதில் வித்யாதேவி பண்டாரி 327 வாக்குகளைப் பெற்று அதிபராக தேர்வானர். அவருக்கு அடுத்த படியாகந் நேபாளி காங்கிரஸ் கட்சியின் குருங் 214 வாக்குகளைப் பெற்றார்.
இன்றைய தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் நாட்டின் முதல் பெண் அதிபராக வித்யாதேவி பண்டாரி நேபாள வரலாற்றில் அவர் இடம்பிடித்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications