"கடும் விளைவுகள்.." சர்வதேச நீதிமன்றத்தையே எச்சரித்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு! ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

டெல் அவிவ்: காசா போரில் போர்க் குற்றம் மற்றும் மனிதக் குலத்திற்கே எதிரான குற்றங்களைப் புரிந்துள்ளதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து இருந்தது. இதற்கிடையே தனக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த சர்வதேச நீதிமன்றம் கடும் எதிர்வினைகளைச் சந்திக்க நேரிடும் என்று நெதன்யாகு வெளிப்படையாகவே எச்சரித்துள்ளார்.

கடந்தாண்டு இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு பதிலடி தரும் நடவடிக்கையில் இஸ்ரேல் இறங்கியது. காசாவில் உள்ள ஹமாஸ் படையைக் குறிவைத்து தீவிர தாக்குதல்கள் நடந்தன.

israel hamas middle east

காசா மக்கள்: இதனால் காசாவில் உள்ள அப்பாவி பொதுமக்களும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இதற்கிடையே காசா மோதலில் போர் குற்றங்கள் நடந்துள்ளதாகச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் நெதன்யாகுவுக்கு பிடிவாரணட் பிறப்பித்து சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது. இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே இது தொடர்பாக நெதன்யாகு சில பரபர கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

யூத எதிர்ப்பு மனநிலையுடன் ட்ரேஃபஸுக்கு நடந்தது போல இந்த விசாரணை நடந்துள்ளதாகவும் கடைசியில் உண்மையே வெல்லும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நெதன்யாகு குறிப்பிட்ட ட்ரேஃபஸ் விசாரணை என்பது 1894- 1906 காலகட்டத்தில் நடந்தது. அப்போது பிரான்ஸ் ராணுவத்தில் இருந்த ஆல்ஃபிரட் ட்ரேஃபஸ் என்ற யூத ராணுவ அதிகாரி தவறாகக் குற்றஞ்சாட்டப்பட்டுத் தண்டிக்கப்பட்டார். நீண்ட விசாரணைக்கு பிறகே அவர் மீது குற்றம் இல்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீண்டும் ராணுவத்தில் சேர்க்கப்பட்டார்.

நெதன்யாகு: அந்த விசாரணையைக் குறிப்பிட்ட நெதன்யாகு, அதுபோலவே இப்போதும் நடந்துள்ளதாகக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், "இப்போது சர்வதேச நீதிமன்றம் நடத்திய விசாரணையும் ஒரு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நீதிபதியின் தலைமையில் நடந்து இருக்கிறது. என் மீதும், இஸ்ரேல் நாட்டின் மீதும் வேண்டுமென்றே பொய்யாகக் குற்றம் சாட்டுகிறது. அப்பாவி மக்கள் உயிரிழக்கக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாகவே இருந்துள்ளோம்.

காசாவில் ஹமாஸ் பதுங்கி இருந்த இடங்களைக் குறிவைத்து மட்டுமே இஸ்ரேல் தாக்குதல் நடத்துகிறது. அப்போதும் அங்கு அப்பாவி மக்கள் இருந்தால் அவர்களை வெளியேற்ற தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அதேநேரம் ஹமாஸ் பயங்கரவாதிகள் தான் அப்பாவி மக்களைச் சுட்டுக் கொல்கிறார்கள். மனித கேடயங்களாகப் பயன்படுத்துகிறார்கள்.

ஏற்க முடியாது: காசா மக்களுக்கு தேவையான உதவிகளை நாங்கள் தான் செய்கிறோம். 700,000 டன் உணவுகளை காசா மக்களுக்கு இஸ்ரேல் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஹமாஸ் பயங்கரவாதிகள் அந்த உணவு பொருட்களை கொள்ளையடிக்கிறார்கள். அப்படியிருக்கும் போது இஸ்ரேல் தான் காசா மக்களை பட்டினி போடுவதாக சொல்வதை ஏற்க முடியாது.

அங்குள்ள மக்கள் மோசமான நோய்களால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகத் தடுப்பூசி போடும் நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். கடந்த சில வாரங்களில் மட்டும் காசாவில் உள்ள 97 சதவீத மக்களுக்கு போலியோவுக்கு தடுப்பூசி போட்டுள்ளோம். அப்படியிருக்கும் போது எப்படி எங்கள் மீது இனப்படுகொலை குற்றச்சாட்டு வருகிறது என்று புரியவே இல்லை. ஹமாஸுக்கு எதிரான இந்த போரைக் கூட நாங்கள் ஆரம்பிக்கவில்லை. கடந்தாண்டு அக். 7ம் தேதி அவர்கள் தான் முதலில் தாக்கினார்கள். நாங்கள் பதிலடி மட்டுமே கொடுத்தோம்.

கடுமையான விளைவுகள்: ஈரான், சிரியா மற்றும் ஏமனில் நடந்த உண்மையான போர்க் குற்றங்கள் தொடர்பாகச் சர்வதேச நீதிமன்றம் அமைதி காப்பது ஏன்.. இஸ்ரேல் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த, இஸ்ரேல் ஆண்களின் தலையைத் துண்டித்த, குழந்தைகளை உயிருடன் எரித்த ஹமாஸ் பயங்கரவாதிகளையும் கூட சர்வதேச நீதிமன்றம் எதுவும் செய்யவில்லை.

நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் சர்வதேச நீதிமன்றமும் சரி, அதன் முடிவை ஆதரிப்பவர்கள் "கடுமையான விளைவுகளை" எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்.. உங்கள் எதிரிகள் தான் எங்கள் எதிரிகள். எனவே, எங்கள் வெற்றி என்பது உலகிற்கே கிடைத்த வெற்றியாகவே இருக்கும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+