காசாவில் கால் வைத்த நெதன்யாகு! போர் முடிந்து விட்டது.. ஹமாஸ் மீண்டும் எழாது என உறுதி
காசா: இஸ்ரேல்-பாலஸ்தீன போர் தீவிரமடைந்து வருகிறது. ஹமாஸின் தலைவர் அடுத்தடுத்து கொல்லப்பட்டுள்ள நிலையில், காசாவில் போர் பதற்றம் ஓரளவுக்கு குறைந்திருக்கிறது. இந்நிலையில், காசா சென்ற இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஹமாஸ் மீண்டும் அதிகாரத்திற்கு வராது என்று கூறியுள்ளார்.
பாலஸ்தீனத்தை உடைத்து இஸ்ரேல் உருவாக்கப்பட்டதிலிருந்து மத்திய கிழக்கில் பதற்றம் நிலவி வருகிறதது. பதற்றம் உச்சம் எட்டும்போது அது உயிர் பலிகளை ஏற்படுத்துகிறது. இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு ஆயுதம் தாங்கிய ஹமாஸ் அமைப்பு பதிலடி கொடுப்பதும், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா வந்து நிற்பதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் நடத்திய தாக்குதல் காரணமாக இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது போரை அறிவித்து.

போரில் ஹமாஸ் முழுமையாக அழிக்கப்படும் என்றும் உறுதி பூண்டிருந்தது. இஸ்ரேல் கூறியபடி கடந்த ஓராண்டு காலத்தில் ஹமாஸ் தலைவர்கள் ஒவ்வொருவராக கொல்லப்பட்டனர். அதேநேரம் மறுபுறம் பொதுமக்களும் இஸ்ரேல் தாக்குதலால் கொல்லப்பட்டிருக்கின்றனர். சுமார் 45,000 பேர் பாலஸ்தீனத்தில் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் பல ஆயிரம் பேர் படுகாயமடைந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் இடம் பெயர்ந்துள்ளனர்.
ஹமாஸ் தலைவர்கள் கொல்லப்பட்ட பிறகும் போர் நிறுத்தப்படாமல் தொடர்வது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இப்படி இருக்கையில் நேற்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு காசாவுக்கு சென்றிருக்கிறார். போர் தொடங்கியதிலிருந்து காசாவுக்கு அவர் செல்வது இதுவே முதல்முறையாகும். அவருடன் பாதுகாப்பு துறை அமைச்சரும் காசாவுக்கு சென்றிருக்கின்றார்.
காசாவில் பேட்டியளித்த நெதன்யாகு, "ஹமாஸின் சகாப்தம் முடிந்துவிட்டது. இனி அவர்களால் அதிகாரத்திற்கு வர முடியாது" என்று கூறியுள்ளார். அதேபோல இஸ்ரேலிலிருந்து கடத்தப்பட்ட பணயக்கைதிகள் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என்றும், அவர்களை மீட்பவர்களுக்கு ரூ.41 கோடி வழங்கப்படும் என்று கூறியுள்ளார். இன்னும் 101 பணயக்கைதிகள் மீட்கப்படாமல் இருக்கின்றனர். போரின் தாக்கம், உயிரிழப்புகள், பொருளாதார பாதிப்பு, மனித உரிமை மீறல் உள்ளிட்டவை குறித்து இஸ்ரேல் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.
குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை நேரடியாக தலையிட்டு கூட போர் நிறுத்தப்படாமல் தொடர்ந்தது. இதற்கெல்லாம் கவலைப்படாமல் காசாவுக்கு சென்று நெதன்யாகு பேட்டியளித்திருப்பது, பாலஸ்தீன மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications