சுற்றிலும் சூழ்ந்த பீரங்கிகள்! ரஷ்ய துப்புரவு பணியாளர் என்ன செய்தார் தெரியுமா.. உலகை உலுக்கிய காட்சி
மாஸ்கோ: ரஷ்யாவில் இப்போது உள்நாட்டுப் போர் ஏற்படும் ஒரு பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், அதைப் பற்றியும் கவலைப்படாமல் துப்புரவுத் தொழிலாளி தனது வேலையைச் செய்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
உக்ரைன் நாட்டில் கடந்த ஓராண்டிற்கும் மேலாக ரஷ்யா தொடர்ந்து போரிட்டு வருகிறது. இந்தப் போர் சில வாரங்களில் முடிந்துவிடும் என்றே முதலில் பலரும் நினைத்த நிலையில், இப்போது அது மாதக் கணக்கில் தொடர்கிறது.

சர்வதேச அளவில் மிகவும் வலிமையான ஒரு ராணுவமாக ரஷ்யா பார்க்கப்பட்டது. இதன் காரணமாகவே உக்ரைனால் ரஷ்யப் படைகளால் தாக்குப்பிடிக்க முடியாது என்று பலரும் கருதினர். இருப்பினும், போர் ஆரம்பித்த பிறகு நிலைமை தலைகீழானது.
உக்ரைன் போர்: தொடக்கத்தில் என்ன தான் ரஷ்யா பல நகரங்களைக் கைப்பற்றினாலும் கொஞ்ச நாட்களில் நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது. மீண்டும் ரஷ்யா வசம் இருந்து நகரங்கள் உக்ரைன் வசம் சென்றது. உக்ரைன் வீரர்கள் காட்டி உறுதியும், உலக நாடுகள் அவர்களுக்கு அளித்த ஆயுதங்களும் ரஷ்யாவை எதிர்த்து நிற்கப் பெரியளவில் உதவியது. இதனால் ரஷ்யா தனது தாக்குதல் யுக்திகளைக் கூட மாற்ற வேண்டி இருந்தது. இதனிடையே இப்போது ரஷ்யாவுக்கு புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது.

அதாவது ரஷ்யாவில் உள்ள தனியார் ராணுவம், கூலிப்படை என்றும் சொல்லலாம், வாக்னர் குழு ரஷ்ய ராணுவத்திற்கு எதிராகத் திரும்பியுள்ளது. தங்கள் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் இதற்குப் பதில் சொல்லியே தீர வேண்டும் என்று அந்த அமைப்பின் தலைவர் பிரிகோஜின் மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், உக்ரைன் போருக்கும் கூட ரஷ்யா பாதுகாப்புத் துறை அமைச்சரே காரணம் என்றும் பரபர குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
வாக்னர் குழு: எல்லையில் உள்ள நகரமான ரோஸ்டோவ் நகரில் வாக்னர் தனது ஆட்களை இறக்கியுள்ளனர். இதனால் அங்கே ஒருவித பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே அங்கே எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில், நகரம் முழுவதும் ராணுவத்தின் அதிநவீன பீரங்கிகள் செல்கிறது. முழுக்க ராணுவம் வீரர்கள் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இருப்பினும், இந்த பரபரப்புக்கு மத்தியில் துப்புரவு ஊழியர் ஒருவர் எந்தவொரு சலனமும் இல்லாமல் தொடர்ந்து தெருவைச் சுத்தம் செய்து வருகிறார். இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. நகரத்தில் ராணுவமே இறங்கியுள்ள போதிலும், அதைத் துளியும் கண்டுகொள்ளாமல் துப்புரவு ஊழியர் அவர் தனது வேலையை சின்சியராக செய்து வருகிறார்.
— Russians With Attitude (@RWApodcast) June 24, 2023
வீடியோ: Osint technical என்ற ட்விட்டர் பயனாளி இந்த வீடியோவை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அவர் மேலும், ""ரோஸ்டோவில் தெருவைச் சுத்தம் செய்யும் துப்புரவுப் பணியாளர் என்ன நடந்தாலும் தனது பணியைத் தொடர்ந்து செய்து வருவதை நம்ப முடியவில்லை" என்று பதிவிட்டுள்ளார். இவர் பகிர்ந்த இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
சிலர் மியான்மாரில் ராணுவ கிளர்ச்சியாக நடந்த போது அங்கே ஜிம் பயிற்சியாளர் கிங் ஹ்னின் வை என்பவர் அத்தனை பரபரப்பிற்கு மத்தியில் நடுரோட்டில் வைத்து உடபயிற்சி வீடியோவை எடுத்து வெளியிட்டார். மியான்மரின் ராணுவம் ஆட்சியைக் கவிழ்க்க ராணுவ வாகனங்கள் பின்னால் அணி வகுத்துச் செல்லும் நிலையில், அதைக் கூட கண்டு கொள்ளாமல் அந்த பெண் மாஸ்க் அணிந்து ஒர்க்அவுட் செய்து கொண்டிருந்தார்.
இந்த வீடியோ அப்போது சர்வதேச அளவில் பெரும் பேசுபொருள் ஆனது. இப்போது அதேபோல ராணுவமே இறங்கியுள்ள போதிலும், இந்த துப்புரவுப் பணியாளர் தனது வேலையைக் கண்ணும் கருத்துமாகச் செய்து வருவதாகப் பலரும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications