"5 வயது மகனையே வெட்டி கொன்று.. சமைத்து சாப்பிட்ட தாய்.." உறைய வைக்கும் ஷாக் சம்பவம்! மிரண்ட போலீசார்
எகிப்து: இளம் பெண் ஒருவர் தான் பெற்ற மகன் என்று கூட பார்க்காமல் அவனைக் கொடூரமாகக் கொலை செய்து தின்ற சம்பவம் நெட்டிசன்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகில் அனைவரைக் காட்டிலும் நம் மீது நமது தாய்க்குத் தான் பாசம் அதிகமாக இருக்கும். நாம் எந்தவொரு மோசமான சூழலில் இருந்தாலும் அம்மா காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை அனைவருக்கும் இருக்கும்.
இக்கட்டான சூழலில் இருக்கும் பிள்ளைகளைக் காக்கும் தாய்மார்கள் குறித்துப் பல செயல்களைப் பார்த்திருப்போம். ஆனால், இங்கே எகிப்து நாட்டில் இளம்பெண் ஒருவர் தனது மகனுக்குச் செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலை: எகிப்து நாட்டை சேர்ந்த இந்தப் பெண் ஐந்து வயதே ஆன தனது மகனைக் கத்தியால் வெட்டிக் கொன்றுள்ளார். அத்துடன் நிற்காமல் இவர் தனது மகனின் தலையின் ஒரு பகுதியையே சாப்பிட்டதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. அந்த பெண் மன ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளாரா என்று நடத்தப்பட்ட சோதனையிலும் அவருக்கு எந்தவொரு மனநல பாதிப்பும் இல்லை என்றே வந்துள்ளது. இதையடுத்து எகிப்து போலீசார் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கத் தொடக்கியுள்ளனர்.
பெற்ற மகனையே கொடூரமாகக் கொன்று தின்ற இவர் 29 வயதான ஹனா மொஹமட் ஹசன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் தனது மகனைத் தலையில் மூன்று முறை தாக்கி கொலை செய்துள்ளார். கொலையை மறைக்க அவர் தனது மகனின் உடலை அகற்ற முடிவு செய்துள்ளார். அதன்படி அவரது உடலைச் சிறு சிறு பாகங்களைத் துண்டித்துள்ளார்.
கொடூரம்: உடல் பாகங்களை ஒவ்வொரு இடத்திலும் புதைக்க அந்தப் பெண் திட்டமிட்டிருந்த நிலையில், நல்வாய்ப்பாக அதற்குள் அவர் கைது செய்யப்பட்டார். இதுமட்டுமின்றி கொலை பற்றி சில மோசமான தகவல்களும் வெளியாகியுள்ளது. அதாவது அந்த பெண் தனது மகனின் தலை மற்றும் பிற சதையை சமைத்தும் சாப்பிட்டுள்ளார்.
உடலைத் துண்டு துண்டாக வெட்டும் வரை அந்தப் பெண் போலீசாரிடம் மாட்டவில்லை. அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாகக் கொலை செய்யப்பட்டவரின் மாமா அங்கே வந்துள்ளார். அங்கிருந்த வாளி ஒன்றில் உடல் உறுப்புகள் இருப்பதைப் பார்த்து அவர் அதிர்ந்து போய்விட்டார். இதையடுத்து அவர் போலீசாருக்கு தகவல் அளித்த பிறகே இந்த கொடூர கொலை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பாதிப்பு: முதலில் ஹனா மொஹமதை கைது செய்த போலீசார், அவர் மன ரீதியாகப் பாதிக்கப்பட்டிருக்கலாம் இதன் காரணமாகவே அவர் இப்படியொரு செயலை செய்திருக்கலாம் எனச் சந்தேகித்தனர். இருப்பினும், அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவர் மன ரீதியாகப் பாதிக்கவில்லை என்பது உறுதியானது. இதையடுத்து அவரை கைது செய்து போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.
மகனைக் கொலை செய்ததை ஒப்புக் கொண்ட அந்த பெண், தனது மகன் எப்போதும் தன்னுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே மகனின் தலையின் ஒரு பகுதியைச் சாப்பிட்டதாகக் கூறி அதிர்ச்சி அளித்தார்.
முன்னாள் கணவர்: இது குறித்து ஹனா மொஹமத் முன்னாள் கணவர் கூறுகையில், "எங்கள் இருவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து ஆகிவிட்டது. இருப்பினும், என்றைக்காவது ஒரு நாள் மீண்டும் நாங்கள் ஒரு குடும்பமாக இருப்போம் என நம்பினேன். எங்களின் ஒரு இணைப்பாக மகன் இருந்தான். அவனை அவ்வப்போது நான் சென்று சந்திப்பேன். அவர்களுக்குத் தேவையானதை அளிப்பேன். ஆனால், என்னுடன் பேசுவதால் எங்கள் மகனையும் அவர் (ஹனா) வெறுக்கத் தொடங்கினாள்.
இந்தச் சூழலில் தான் யாருமே எதிர்பார்க்காத வகையில் இந்தக் கொடூரத்தை அவர் செய்துள்ளார். எனது மகனின் உடலைப் பார்க்க வேண்டும் என எண்ணினேன். இருப்பினும், உடல் மிகக் கொடூரமான நிலையில் இருப்பதாகக் கூறி போலீசார் உடலைக் கூட பார்க்க அனுமதிக்க மறுத்துவிட்டனர்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications